வைபவ் சூர்யவன்சி Reuters
கிரிக்கெட்

அடுத்தடுத்து 28 சிக்ஸர்கள்!! வைபவ் சூர்யவன்சி உலக சாதனை!!

அடுத்தடுத்து 28 சிக்ஸர்கள் விளாசி ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை படைத்திருக்கிறார் வைபவ் சூர்யவன்சி.

Premkumar S

கத்தாரில் ஆசியக் கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் என்ற தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் திலக் வர்மா தலைமையிலான இந்திய (ஏ) அணி பங்கேற்றுள்ளது. இன்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா யுஏஇ அணியைச் சந்தித்தது. அப்போது, முதலில் பேட்டிங் செய்த யுஏஇ 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

இந்தச்சூழலில் தான், இந்திய அணியின் இன்றைய இன்னிங்க்ஸ் பல்வேறு உலகசாதனைகள் படைப்பதற்கு காரணமாக இருந்திருக்கிறது. இந்த சாதனைகளைப் படைத்தவர் 15 வயதான இளம் கிரிக்கெட்டர் வைபவ் சூர்யவன்சி. அப்படி என்ன சாதனை படைத்துள்ளார் பார்க்கலாம்.

File image

250 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய இந்தியா ஏ அணிக்காகத் தொடக்க வீரராகக் களமிறங்கிய வைபவ், முதல் ஓவரிலிருந்தே அதிரடியைத் தொடங்கினார். ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே தொடர்ந்து 3 சிக்ஸர்களை விளாசி எதிரணியை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். தொடர்ந்து பந்துகளை மைதானத்தின் நாலாபுறமும் சிதறடித்த அவர், வெறும் 16 பந்துகளில் அரைசதத்தைக் கடந்தார். பின்னர் தனது அதிரடியை மேலும் தீவிரப்படுத்திய வைபவ், வெறும் 28 பந்துகளில் சதமடித்து புதிய உலக சாதனை படைத்தார். இதன் மூலம், ஆஸ்திரேலிய வீரர் ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க் 29 பந்துகளில் சதமடித்து வைத்திருந்த சாதனையை முறியடித்தார்.

அதன்பிறகு தொடர் உலக சாதனைகள் தான், குறிப்பாக வெறும் 40 பந்துகளில் 150 ரன்களைக் கடந்த அவர், 52 பந்துகளில் இரட்டைச் சதத்தையும் எட்டினார். இறுதியில் 53 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 204 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதில் 28 சிக்ஸர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும். இதன் மூலம் ஒருநாள் போட்டி வகையான முதல் தர கிரிக்கெட்டில் ஓர் இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் தன்வசப்படுத்தியிருக்கிறார். இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவின் டி'ஆர்சி ஷார்ட் 23 சிக்ஸர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.

வெறும் 15 வயதில் உலக கிரிக்கெட்டையே வியக்க வைத்திருக்கும் வைபவ் சூர்யவன்சியின் இந்த அதிரடி ஆட்டம், சர்வதேச அளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதைற்கிடையில், 14.2 ஓவர்களிலேயே இலக்கை அடைந்து இந்திய அணி நாக் அவுட் சுற்றுக்குள் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.