இந்திய அணியின் இளம் நட்சத்திரமாக உருவாகி வருகிறார், 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி. அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெற்ற வைபவ், இன்னும் சர்வதேசப் போட்டிகளில் களமிறக்கப்படவில்லை. விரைவில் அவர் களமிறக்கப்படுவார் எனத் தெரிகிறது. அதற்கான கோரிக்கைகள் வலுத்துவருகின்றன. இதையடுத்து, அவர் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், அவர் செய்ததாகக் கூறப்படும் சிறு விஷயம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரரான அபிஷேக் சர்மாவின் காதலி எனச் சொல்லப்படும் லைலா பைசலின் இன்ஸ்டாகிராம் ரீல் வீடியோ ஒன்றை வைபவ் சூர்யவன்ஷி தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதைப் பார்த்த பயனர்கள் ஜாலியாக பதிவிட்டு வருகின்றனர். தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருக்கும் வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா உள்ளிட்ட சக வீரர்களுடன் பழகி வருகிறார். அந்த அடிப்படையில் அபிஷேக் சர்மாவின் தோழியான லைலாவின் வீடியோவை அவர் பார்த்ததுடன், கை தவறி பகிர்ந்திருக்கலாம் எனப் பயனர்கள் கூறுகின்றனர். ஆனால், இந்த தவறு குறித்து வைபவ் தரப்பிலிருந்தோ அல்லது லைலா தரப்பிலிருந்தோ எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை.