ஐபிஎல் 2026 மூன்றாவது லீக் ஆட்டத்தில் குவஹாத்தியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொள்கிறது. காயம் காரணமாக தோனி இரண்டு வாரங்களுக்கு வெளியேறிய நிலையில், மாஸ்டர் மைண்ட் இல்லாமல் சென்னை வெற்றிபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்ததால், புதிய முகங்களுடன் சென்னை முதலில் பேட்டிங் செய்கிறது.
ஐபிஎல் தொடரின் 19வது சீசன், ஐந்து மாநில தேர்தலுக்கு மத்தியில் மார்ச் 28ஆம் தேதி தொடங்கியது. இரண்டு கட்டமாக ஐபிஎல் போட்டிகள் நடக்கும் நிலையில், முதல் போட்டியில் ஹைதராபாத்தை நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வென்று வாகை சூடியது. நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 221 ரன்களை சேஸ்செய்து மும்பை இந்தியன்ஸ் சாதனை படைத்தது.
இந்நிலையில் இன்று நடக்கும் 3வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொண்டு விளையாடுகிறது. தோனிக்கு காயம் காரணமாக 2 வாரங்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில், மாஸ்டர் மைண்ட் இல்லாம சென்னை அணி வெல்லுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
குவஹாத்தியில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் புது வீரர்களாக மேத்யூ ஷார்ட், கார்த்திக் சர்மா, மேட் ஹென்றி முதலியோர் இடம்பெற்றுள்ளனர். பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட உர்வில் பட்டேல் பிளேயிங் 11 மற்றும் இம்பேக்ட் வீரர்கள் இரண்டிலும் இடம்பெறவில்லை.. சிறந்த ஃபார்மில் இருக்கும் உர்வில் பட்டேல் இடம்பெறாதது ரசிகர்களை ஏமாற்றத்தில் தள்ளியுள்ளது..
சென்னை பிளேயிங் 11 - சஞ்சு சாம்சன்(w), ருதுராஜ் கெய்க்வாட்(c), ஆயுஷ் மத்ரே, மேத்யூ ஷார்ட், ஷிவம் துபே, கார்த்திக் ஷர்மா, ஜேமி ஓவர்டன், நூர் அகமது, மாட் ஹென்றி, அன்ஷுல் கம்போஜ், கலீல் அகமது
இம்பேக்ட் சப் - சர்பராஸ் கான், பிரசாந்த் வீர், ராகுல் சாஹர், குர்ஜப்னீத் சிங், ராமகிருஷ்ண கோஷ்
ராஜஸ்தான் பிளேயிங் 11 - யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூரியவன்ஷி, ரியான் பராக்(c), துருவ் ஜூரல்(w), ஷிம்ரன் ஹெட்மயர், ரவீந்திர ஜடேஜா, ஜோஃப்ரா ஆர்ச்சர், நந்த்ரே பர்கர், சந்தீப் சர்மா, ரவி பிஷ்னோய், பிரிஜேஷ் சர்மா
இம்பேக்ட் சப் - டோனோவன் ஃபெரீரா, லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், ரவி சிங், சுஷாந்த் மிஸ்ரா, துஷார் தேஷ்பாண்டே