டிரெண்ட் போல்ட்
டிரெண்ட் போல்ட் ICC
கிரிக்கெட்

“இந்தியா உடனான அரையிறுதி போட்டிக்காக காத்திருக்கிறேன்”- டிரெண்ட் போல்ட்

Rishan Vengai

இந்தியா உடனான அரையிறுதி போட்டிக்காக காத்திருக்கிறேன்! - டிரெண்ட் போல்ட்

நடப்பு உலகக்கோப்பையில் இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா முதலிய அணிகள் முதல் மூன்று அணிகளாக அரையிறுதிக்கு தகுதிபெற்று அசத்தியுள்ளன. அரையிறுதியின் 4வது இடத்துக்கான போட்டியானது நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் மூன்று அணிகளுக்கு இடையே பலத்த போட்டியாக இருந்தது. ஆனால் ஆப்கானிஸ்தான் அணிக்கு இருந்த பெரிய வாய்ப்பை ஆஸ்திரேலியா போட்டியில் மேக்ஸ்வெல் தனியொரு ஆளாக தட்டிப்பறித்துவிட்ட நிலையில், 4வது அணி நியூசிலாந்தா? பாகிஸ்தானா? என்ற குழப்பம் மட்டும் நீடித்திருந்தது.

new zealand

இந்நிலையில் அரையிறுதிக்கான வாய்ப்பை உறுதிசெய்யும் முக்கியமான போட்டியில் இலங்கையை எதிர்த்து விளையாடியது நியூசிலாந்து அணி. பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் போட்டி நடைபெற்றதால், இலங்கை அணி ஏதாவது மேஜிக் நிகழ்த்துமா என்ற எதிர்ப்பார்ப்பும் இருந்தது. ஆனால் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு எதிராக அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணி, இலங்கையை 171 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து கலக்கிப்போட்டது.

rachin

172 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து வீரர்கள் போட்டியை விரைவாகவே முடிக்கும் விதமாக அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். முதல் விக்கெட்டுக்கே 86 ரன்கள் சேர்த்த கான்வே-ரச்சின் கூட்டணி போட்டியை கிட்டத்தட்ட முடிக்கும் இன்னிங்ஸை ஆடியது. 23.2 ஒவரிலேயே 172 ரன்களை எட்டிய நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 4வது அணியாக அரையிறுதிவாய்ப்பை கிட்டத்தட்ட எட்டிப்பிடித்திருக்கிறது. 3 விக்கெட்டுகளை வீழ்த்திய டிரெண்ட் போல்ட்டுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்தியா உடனான அரையிறுதி போட்டிக்காக காத்திருக்கிறேன்! - டிரெண்ட் போல்ட்

ஆட்டநாயகன் விருது வென்றதற்கு பிறகு பேசிய டிரெண்ட் போல்ட், “ முக்கியமான போட்டியில் வெற்றிபெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. கடினமான ஆடுகளத்தில் சிறப்பாக செயல்படுவது எப்போதுமே சவாலான ஒரு விசயம். இந்தியா எப்போதும் வேகப்பந்துவீச்சுக்கு சவலான ஒரு நிலைமைகளை கொண்ட நாடு, முடிந்தவரை என்னுடைய அனுபவத்தை பயன்படுத்தி வருகிறேன்.

boult

எல்லோரின் விருப்பமும் தொடரை நடத்தும் அணி வெற்றிபெற வேண்டும் என்பதாகவே இருக்கும். இந்திய அணியும் சிறப்பாக விளையாடிவருகிறது. இருப்பினும் இந்தியாவுடனான அரையிறுதிப்போட்டி சுவாரசியமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு சுவாரசியமான அரையிறுதிப்போட்டிக்காக காத்திருக்கிறேன்” என பேசியுள்ளார்.