டிராவிஸ் ஹெட் cricinfo
கிரிக்கெட்

பன்றதெல்லாம் சம்பவம் தான்.. ஆஷஸ், BGT இரண்டிலும் முதல் வீரராக சாதனை.. டிராவிஸ் ஹெட் மிரட்டல்!

அதிரடிக்கு பெயர் போன வீரரான ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் ஆஷஸ் மற்றும் பார்டர் கவாஸ்கர் தொடரில் முதல் வீரராக யாரும் செய்யாத சம்பவத்தை செய்துள்ளார்..

Rishan Vengai

அடித்துஅவர்க்டிராவிஸ் ஹெட் தனது அதிரடி ஆட்டத்தால் ஆஸ்திரேலியாவிற்கு பல சாதனைகளை பெற்றுத்தந்துள்ளார். 2024-2025 பார்டர் கவாஸ்கர் தொடரில் 448 ரன்கள் குவித்து, 2025 ஆஷஸ் தொடரில் 528 ரன்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். அவரது ஆட்டம் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் முக்கியமான அங்கமாக மாறியுள்ளது.

டிராவிஸ் ஹெட் இப்படியான அதிரடி வீரராக மாறுவார் என்றும், எந்தவொரு பந்துவீச்சாளருக்கும் சிம்மசொப்பனமாக அச்சுறுத்துவார் என்றும் தெரிந்திருந்தால் 2016 ஐபிஎல் சீசனில் விலைக்கு வாங்கிய ஆர்சிபி அணி அவரை வெளியேற்றியிருக்காது.

ஆர்சிபிக்காக 2016, 2017 என இரண்டு சீசன்களில் விளையாடிய டிராவிஸ் ஹெட் 10 இன்னிங்ஸ்களில் வெறும் 201 ரன்களை மட்டுமே அடித்திருந்தார். அதில் ஒரே ஒரு அரைசதமும், அவருடைய ஸ்டிரைக்ரேட் 135ஆக மட்டுமே இருந்தது.

2018ஆம் ஆண்டு ஆர்சிபி அவரை வெளியேற்றிய பிறகு 2018-2023 வரை எந்த ஐபிஎல் சீசனிலும் ஹெட் பங்கேற்கவில்லை. தன்னுடைய ஆட்டத்திறனை மெருகேற்றிக்கொண்ட டிராவிஸ் ஹெட், பவுலர்களுக்கு ஒரு நைட்மேராக 2023 ஐபிஎல் தொடருக்கு திரும்பினார். அங்கு முதல் கம்பேக் ஐபிஎல் போட்டியை சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய அவர், மும்பை அணிக்கு எதிராக 24 பந்துகளில் 62 ரன்கள் அடித்து தரமான கம்பேக் கொடுத்தார்..

அங்கிருந்து ஐபிஎல், சர்வதேச கிரிக்கெட் என அவர் செஞ்ச சம்பவங்கள் எல்லாம் காலத்திற்கும் நிலைத்து நின்று பேசக்கூடியவை.. தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் இரண்டு ஃபைனல்களில் இந்தியாவை தோற்கடித்து 2 ஐசிசி கோப்பைகளை வென்ற டிராவிஸ் ஹெட், தொடர்ந்து பல அற்புதங்களை ஆஸ்திரேலியாவிற்காக செய்து வருகிறார்.

முதல் வீரராக ஆஷஸ், பார்டர் கவாஸ்கர் தொடரில் சாதனை..

இந்தியாவிற்கு எதிரான 2024-2025 பார்டர் கவாஸ்கர் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட், இரண்டு சதங்கள் அடித்து, 56 சராசரியுடன் 448 ரன்கள் குவித்திருந்தார். அத்தொடரில் 400 ரன்களுக்கு மேல் அடித்த ஒரே வீரர் டிராவிஸ் ஹெட் மட்டுமே.

டிராவிஸ் ஹெட்

இந்தசூழலில் தற்போது இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரிலும் வெளுத்துவாங்கி வரும் ஹெட், 66 சராசரியுடன் 2 சதங்களுடன் 528 ரன்கள் குவித்துள்ளார். நடப்பு ஆஷஸ் தொடரில் 500, 400 ரன்களுக்கு மேல் அடித்த ஒரே வீரராக டிராவிஸ் ஹெட் மட்டுமே நீடிக்கிறார். தற்போது நடந்துவரும் 5வது ஆஷஸ் டெஸ்ட்டிலும் 91 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் விளையாடிவரும் ஹெட், 3வது சதத்தை எதிர்நோக்கி விளையாடிவருகிறார்.

டிராவிஸ் ஹெட் ஆஸ்திரேலியா அணிக்கு ஒரு கேம் சேஞ்சராக அதிரடி காட்டிவரும் நிலையில், 2026 டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவிற்கு முக்கியவீரராக இருப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.