பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள தென்னாப்பிரிக்கா மகளிர் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
முதல் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வென்று 1-0 என முன்னிலை பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி இன்று தொடங்கி நடைபெற்றுவருகிறது.
பரபரப்பாக தொடங்கிய போட்டியில் மழை குறுக்கிட்டதால் 46 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய டாஸ்மின் பிரிட்ஸ் மற்றும் கேப்டன் லாரா வால்வார்ட் இருவரும் விக்கெட்டையே விட்டுக்கொடுக்காமல் அடுத்தடுத்து சதமடித்து அசத்தினர்.
10 பவுண்டரிகளை விரட்டிய கேப்டன் லாரா 100 ரன்கள் அடித்து அவுட்டாக, இறுதிவரை ஆட்டமிழக்காமல் 141 பந்துகளில் 20 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என துவம்சம்செய்த டாஸ்மின் 171* ரன்கள் குவித்து மிரட்டினார். இருவரின் அசத்தலான பேட்டிங்கால் 46 ஓவரில் 292 ரன்கள் குவித்தது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி.
பாகிஸ்தான் மகளிர் அணி 293 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி விளையாடிவருகிறது.