2026 ஆசிய விளையாட்டின் டி20 இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன. பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்க மறுத்த நிலையில், இந்த போட்டி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
2026 ஆசிய விளையாட்டின் ஒரு அங்கமாக டி20 கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட கிரிக்கெட் நாடுகளுடன் சேர்ந்து ஆப்கானிஸ்தான், ஜப்பான், ஓமன், ஹாங்காங், மலேசியா மற்றும் நேபாள் உள்ளிட்ட 10 அணிகள் மொத்தமாக பங்கேற்றன.
பரபரப்பாக லீக் போட்டிகள் நடைபெற்ற நிலையில், நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன. பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு தொடர்ந்து இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்க மறுத்துவரும் நிலையில், பாகிஸ்தான் இறுதிப்போட்டியில் வெற்றிபெற போராடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தப்போட்டி மீது எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.