indian t20 team web
கிரிக்கெட்

ஆசியக்கோப்பை ஆடும் 11 எப்படி இருக்கவேண்டும்..? சுனில் கவாஸ்கர் அட்வைஸ்!

சஞ்சு சாம்சன், திலக் வர்மா இருவருமே அணியில் இருக்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

Rishan Vengai

2025 ஆசியக்கோப்பை தொடரானது டி20 வடிவத்தில் செப்டம்பர் 9 முதல் செப்டம்பர் 28 வரை நடைபெறவிருக்கிறது.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஹாங்ஹாங், ஓமன் முதலிய 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், இந்தியா, பாகிஸ்தான், யுஏஇ, ஓமன் முதலிய அணிகள் ஏ பிரிவிலும், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் முதலிய அணிகள் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.

ஆசியக் கோப்பை, பிசிசிஐ

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டு அணிகள் துபாய் மைதானத்தில் செப்டம்பர் 14 அன்று மோதஉள்ள நிலையில், தொடர் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சுனில் கவாஸ்கர் அட்வைஸ்..

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியஅணியின் லெவன் எப்படியிருக்கும்வேண்டும் என்பது குறித்து முன்னாள்வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ள கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது.

களமிறங்கும் 11 பேரில் அக்சர் படேல்அணியில் இருக்கும்போது, ரிங்கு சிங், ஷிவம் துபே ஆகியோர் வாய்ப்புக்காக சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும் என அவர்கூறியுள்ளார்.

சஞ்சு சாம்சன் போன்ற ஒரு திறமையான வீரரை புறக்கணிக்கக்கூடாது என்றும் கூறியுள்ளார். சாம்சனை மூன்றாவது வீரராகக் களமிறக்கலாம் என்றும், திலக்வர்மாவை ஃபினிஷராக பயன்படுத்தலாம் என்றும் கவாஸ்கர் பரிந்துரைத்துள்ளார்.

4 வேகப்பந்துவீச்சாளர்கள், 2 சுழந்பந்து வீச்சாளர்கள் என ஆறு பந்துவீச்சாளர்கள் அணியில் இருக்க வேண்டும் என ஆலோசனை கூறியுள்ளார். பும்ராவின் பணிச்சுமைகுறித்து எந்தக் கவலையும் இல்லை என்றும் கவாஸ்கர் தெளிவுபடுத்தியுள்ளார். டி20 போட்டியில் அவர் நான்கு ஓவர்கள் மட்டுமே வீசுவார் என்பதால், அது ஒரு பிரச்சனையாக இருக்காது என்றும் கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.