2025 ஆசியக்கோப்பை தொடரானது முக்கியமான கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. ஒரு தோல்வி கூட அடையாமல் ஒருபக்கம் இந்திய அணி ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில், தோல்விக்கு பிறகு வெற்றிபெற்ற ஆகவேண்டிய மோதலில் இன்று இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
பரபரப்பாக நடந்துமுடிந்த லீக் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்தியா, இலங்கை, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன.
சூப்பர் 4 சுற்று மோதலில் பாகிஸ்தான் இந்தியாவிடமும், இலங்கை வங்கதேசத்திடமும் தோல்வியுற்றன. இரண்டு தோல்விக்கு பிறகு வெல்லவேண்டிய முக்கியமான போட்டியில் இலங்கை-பாகிஸ்தான் இன்று மோதுகின்றன.
இந்தப்போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பில் உயிர்ப்புடன் இருக்கும், மற்ற அணி ரன்ரேட் அடிப்படையில் மற்ற அணிகளின் தோல்வியை பொறுத்த வாய்ப்பை பெறும்நிலைக்கு செல்லும்.
பரபரப்பாக தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. முதல் ஓவரிலேயே தொடக்க வீரர் குசால் மெண்டீஸை கோல்டன் டக்கில் வெளியேற்றிய ஷாஹீன் அப்ரிடி, அடுத்த ஓவரில் பதும் நிசாங்காவையும் வெளியேற்றினார். அடுத்தடுத்த வந்த வீரர்கள் அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்த முயன்று விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
58 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இலங்கை அணி இழக்க மிடில் ஆர்டரில் களமிறங்கிய கமிந்து மெண்டீஸ் நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 44 பந்துகளுக்கு 50 ரன்கள் அடித்து அணியை 133 ரன்களுக்கு எடுத்துவந்தார்.
134 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடும் பாகிஸ்தான் அணி 5 ஓவர்களுக்கு 43/0 ரன்கள் அடித்து சிறப்பாக விளையாடிவருகிறது.