இலங்கை கிரிக்கெட் வாரியம்
இலங்கை கிரிக்கெட் வாரியம்  புதிய தலைமுறை
கிரிக்கெட்

உலகக்கோப்பை தொடர் தோல்வியால் இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைப்பு

PT WEB

13ஆவது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில்  இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் அரையிறுதி சுற்றை எட்டியுள்ளன. மீதமுள்ள 2 அணிகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில், இலங்கை அணி 7 ஆட்டங்களில் விளையாடிய நிலையில், 5 ஆட்டங்களில் தோல்வியடைந்ததால் அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

இலங்கை கிரிக்கெட் வாரியம்

மேலும், இந்தியாவுக்கு எதிராக களமிறங்கிய ஆட்டத்தில் வெறும் 55 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இந்தச்சூழலில், உலகக்கோப்பையில் தொடர் தோல்வியை தழுவியதால் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்து அந்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்க உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தற்காலிக தலைவராக அர்ஜூனா ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். வாரியத்தின் தற்காலிக குழுவில் ஓய்வுபெற்ற நீதிபதி உட்பட 7 பேர் இடம்பெற்றுள்ளனர்.