ஆஸ்திரேலியாவிற்கு எதிராக தொடரை வென்றது தென்னாப்பிரிக்கா cricinfo
கிரிக்கெட்

’ஆஸ்திரேலியாவிற்கு வந்த சோதனை..’ வரிசையாக 4 முறை 200 ரன்னுக்குள் AllOut! சம்பவம் செய்த தெ.ஆப்ரிக்கா!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரை வென்று அசத்தியுள்ளது தென்னாப்பிரிக்கா அணியின் இளம்படை.

Rishan Vengai

  • தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா மோதிய 2வது ஒருநாள் போட்டி

  • ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஒருநாள் தொடரை வென்றது தென்னாப்பிரிக்கா

  • வரிசையாக 4 போட்டிகளில் 200 ரன்னுக்குள் சுருண்டது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள தென்னாப்பிரிக்கா அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடியது.

ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா

முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என ஆஸ்திரேலியா வென்ற நிலையில், அதற்குபிறகு நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் கம்பேக் கொடுத்த தென்னாப்பிரிக்கா அணி தொடரை வென்று அசத்தியுள்ளது.

193 ரன்னில் சுருண்ட ஆஸ்திரேலியா..

முதலில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 296 ரன்கள் குவித்த தென்னாப்பிரிக்கா அணி, ஆஸ்திரேலியாவை 198 ரன்களுக்கு சுருட்டி 98 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. 5 விக்கெட்டுகளை வீழ்த்திய கேசவ் மஹாராஜ் அசத்தினார்.

தென்னாப்பிரிக்கா

இந்நிலையில் இன்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்று தொடரை சமன்செய்யும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது. ஆனால் மீண்டும் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.

லுங்கி இங்கிடி

முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 49.1 ஓவரில் 277 ரன்கள் சேர்த்தது. அதனை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா லுங்கி இங்கிடியின் அபாரமான பந்துவீச்சு மூலம் 193 ரன்னில் சுருண்டு படுதோல்வியை சந்தித்தது.

வரிசையாக 4 முறை 200ரன்னுக்குள் சுருண்ட ஆஸ்திரேலியா..

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலிரண்டு போட்டிகளை வென்ற தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மண்ணில் தொடரை வென்று அசத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல் கடைசியாக ஆஸ்திரேலியாவிற்கு விளையாடிய 5 ஒருநாள் தொடர்களையும் வரிசையாக வென்று தென்னாப்பிரிக்கா அசத்தியுள்ளது.

அத்துடன் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் 200 ரன்னுக்குள் சுருண்ட ஆஸ்திரேலியா, தங்களுடைய கடைசி 4 போட்டிகளிலும் 163, 140, 198, 193 என 200 ரன்களுக்கும் குறைவாக பதிவுசெய்துள்ளது. ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இதுபோன்று நடப்பது இது இரண்டாவது முறையாகும்.