gambhir, ganguly x page
கிரிக்கெட்

SAவிடம் தோல்வி.. கம்பீரை நீக்க வலுக்கும் கோரிக்கை.. கங்குலி சொல்வது என்ன?

கம்பீரை பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. ஆனால், கம்பீரின் பதவி நீக்க கோரிக்கையை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நிராகரித்துள்ளார்.

Prakash J

கம்பீரை பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. ஆனால், கம்பீரின் பதவி நீக்க கோரிக்கையை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நிராகரித்துள்ளார்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி, 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 உள்ளிட்ட தொடர்களில் பங்கேற்று விளையாடுகிறது. அந்த வகையில், இவ்விரு அணிகளுக்கு இடையே கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி வெறும் 30 ரன்களில் தோல்வியைத் தழுவியது. இதையடுத்து, இந்திய அணியின் மீதும் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் காம்பீர் மீதும் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. அதிலும், கம்பீரை பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. ஆனால், கம்பீரின் பதவி நீக்க கோரிக்கையை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நிராகரித்துள்ளார்.

Ganguly

இதுகுறித்து இந்தியா டுடேவுக்கு அவர் அளித்துள்ள பதிலில், “இந்த கட்டத்தில் கவுதம் கம்பீரை நீக்குவது என்ற கேள்விக்கே இடமில்லை. ஆனால் ஓர் அணியாக, அவர்கள் ஒன்றகூடி டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற கடினமாக உழைப்போம் என்று தங்களுக்குள் சொல்லிக்கொள்ள வேண்டும், ஏனென்றால் தட்டையான பிட்ச்களில், எதிரணி வீரர்கள் பேட்டிங் செய்வார்கள். ஒவ்வொரு அணியின் முதல் இன்னிங்ஸிலும் பெரிய ரன்கள் எடுக்கப்படும் என்பதால் இது மிகவும் கடினம். இந்தியாவில், ஆச்சரியப்படும் விதமாக, நான்காவது நாள், ஐந்தாவது நாளில் ஆட்டம் எவ்வாறு விரைவாக மாறுகிறது என்பதை நீங்கள் காண்பீர்கள். எனவே அவர்கள் அதில் பொறுமையாக இருக்க வேண்டும். பந்து பழையதாகும்போது இந்தியாவில் ஸ்விங் செயல்பாட்டுக்கு வருகிறது. எனவே இது ஒரு மனநிலை மாற்றம் மட்டுமே. பயிற்சியாளராக கௌதமும், கேப்டனாக ஷுப்மனும் இங்கிலாந்தில் நல்ல பேட்டிங் பிட்ச்களில் சிறப்பாக செயல்பட்டனர். மேலும் அவர்களால் இந்தியாவிலும் சிறப்பாக செயல்பட முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆகையால் எதிர்காலத்தில் சிறந்த, சமநிலையான ஆடுகளங்களில் விளையாடுவதில் கவனம் செலுத்த வேண்டும். டெஸ்ட் போட்டிகளில் ஏற்படும் தொடர்ச்சியான குறைபாடுகளை சரிசெய்ய இந்தியா முயற்சிக்கும்போது, ​​சிறந்த பிட்சுகள், பொறுமை மற்றும் தெளிவான திட்டமிடல் ஆகியவை அவசியம்” என அவர் தெரிவித்துள்ளார்.