India vs Pakistan
India vs Pakistan File Image
கிரிக்கெட்

'இந்தியா-பாகிஸ்தான் போட்டியை விட இந்த போட்டிதான் தரமா, சிறப்பா இருக்கும்' - கங்குலி சொல்வது எது?

Justindurai S

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் வரும் அக்டோபா் 5-ஆம் தேதி தொடங்கி நவம்பா் 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்திய அணி தனது முதல் போட்டியை அக்டோபர் 8ஆம் தேதி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடுகிறது. இப்போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. கிரிக்கெட் உலகமே எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அக்டோபர் 15ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.

India vs Australia

இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை விட இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொள்ளும் போட்டிதான் மிகவும் சிறப்பாக இருக்கும் என கருத்து தெரிவித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் மற்றும் பிசிசிஐ முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி.

இந்தப் போட்டி குறித்து பேசி உள்ள கங்குலி, ”இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டிக்கு மிகுந்த பரபரப்பு இருக்கிறது. ஆனால் நீண்ட காலமாக போட்டி தரமாக அமைந்தது இல்லை. ஏனெனில் இந்தியா ஒரு தலைப்பட்சமாகத்தான் பாகிஸ்தான் அணியை வென்று வந்திருக்கிறது. துபாயில் நடந்த டி20 உலகக் கோப்பையில் மட்டுமே பாகிஸ்தான் இந்தியாவை தோற்கடித்திருக்கலாம். ஆனால் அந்த போட்டியில் இந்தியா சிறப்பாக விளையாடவில்லை.

என்னைப் பொருத்தவரை இந்த உலகக் கோப்பையில் இந்தியா ஆஸ்திரேலியா மோதிக் கொள்ளும் போட்டிதான் மிகவும் சிறப்பாக இருக்கும். ஏனென்றால், அந்தப் போட்டி மிகுந்த தரத்தோடு இருக்கும். இந்த பாகிஸ்தான் அணியும் நன்றாக இருக்கிறது. இவர்கள் பிளாட் விக்கெட்டில் நன்றாக விளையாடுகிறார்கள். அப்படியான நிலைமைகளில் பந்து வீசவும் நல்ல பந்துவீச்சாளர்கள் வைத்திருக்கிறார்கள்.

Ganguly

அதே சமயத்தில் இந்திய அணி நல்ல வேகம் மற்றும் ஸ்விங் இருக்கும் ஆடுகளங்களிலும் சிறப்பான ஆட்டத்தை இதுவரை வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள். இந்திய அணியின் பேட்டிங் தரம் மிக நன்றாக இருக்கிறது. இதில் என்ன நடக்கும் என்று என்னால் முன்னோக்கி சொல்ல முடியாது. இந்தியா இதில் எப்போது வேண்டுமானாலும் முன்னேறும்” என்று அவர் கூறி இருக்கிறார்.