ஸ்மிரிதி மந்தனா படைத்த உலக சாதனை web
கிரிக்கெட்

ODI கிரிக்கெட்டில் புதிய உலகசாதனை படைத்த ஸ்மிரிதி மந்தனா!

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் புதிய உலக சாதனையை படைத்துள்ளார் இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா.

Rishan Vengai

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் புதிய உலக சாதனையை படைத்துள்ளார் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா.

இந்திய மகளிர் அணியின் தொடக்க வீரரான ஸ்மிருதி மந்தனா தொடர்ந்து உலக கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துவருகிறார்.

சமீபத்தில் டி20 கிரிக்கெட்டில் சதம் விளாசிய மந்தனா, ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 அனைத்து வடிவத்திலும் சதமடித்த முதல் இந்திய வீராங்கனையாக வரலாறு படைத்தார்.

ஸ்மிரிதி மந்தனா

இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் புதிய உலகசாதனை படைத்து அசத்தியுள்ளார்.

உலக சாதனை படைத்த ஸ்மிரிதி..

2025 மகளிர் உலகக்கோப்பையின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. முதலில் பேட்டிங் செய்துவரும் இந்திய அணி 18 ஓவர் முடிவில் 104/0 என வலுவான தொடக்கத்தை பெற்றுள்ளது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஸ்மிருதி 54* ரன்கள், பிரதிகா 41* ரன்களில் பேட்டிங் செய்துவருகின்றனர்.

இந்நிலையில் அரைசதமடித்த ஸ்மிருதி மந்தனா நடப்பாண்டில் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்களை கடந்து புதிய உலகசாதனை படைத்தார். இதுவரை எந்தவொரு வீரரும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் 1000 ரன்கள் அடிக்காத நிலையில், முதல் வீராங்கனையாக ஸ்மிருதி சாதனை படைத்து அசத்தியுள்ளார்.