siraj - head web
கிரிக்கெட்

பற்றிக்கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடர்.. வார்த்தை போரில் ஈடுபட்ட சிராஜ்-ஹெட்! Booedசெய்த ஆஸி ரசிகர்கள்!

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பழைய ஆக்ரோசமான மோதல் இல்லை என்று விமர்சனம் வைத்த பல்வேறு தரப்பினருக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டியானது களத்தில் தீயை பற்றவைத்தது.

Rishan Vengai

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடிவருகிறது.

பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நடப்பு WTC சாம்பியனான ஆஸ்திரேலியாவை 295 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி மீண்டும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.

அடிலெய்டு மைதானத்தில் தொடங்கி பிங்க்பால் ஆட்டமாக நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு அணிகளும் வெற்றிக்காக யுத்தம் நடத்திவருகின்றன.

travis head

பரபரப்பாக தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி, மிட்செல் ஸ்டார்க்கின் 6 விக்கெட்டுகள் என்ற அபாரமான ஸ்பெல்லில் சிக்கி 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியாவை தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி டிராவிஸ் ஹெட்டின் அதிரடியான சதத்தால் 337 ரன்கள் சேர்த்தது.

டிராவிஸ் ஹெட்டை சீண்டிய சிராஜின் send-off!

ஆஸ்திரேலியா அணியின் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் ஹீரோவாக டிராவிஸ் ஹெட் திகழ்ந்தார். திடமாக நிலைத்து நின்று வெளுத்துவாங்கிய ஹெட் 141 பந்துகளில் 17 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 140 ரன்கள் அடித்து அசத்தினார். ஆனால் சிராஜ் வீசிய 82வது ஓவரின் 4வது பந்தில் யார்க்கர் பந்தை கணிக்காத டிராவிஸ் ஹெட், பந்தை அடிப்பதில் கோட்டைவிட போல்டாக்கிய முகமது சிராஜ் ஆக்ரோசமான முறையில் வெளியே போவென்பது போல் சைகை செய்து செண்ட் ஆஃப் கொடுத்தார்.

அதைப்பார்த்த டிராவிஸ் ஹெட் சிராஜுக்கு எதிராக ஹீட்டான வார்த்தைகளை உதிர்த்துவிட்டு வெளியேறினார். ஹெட் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இருப்பினும் சதமடித்த தங்களுடைய வீரருக்கு எதிராக மோசமான முறையில் செண்ட் ஆஃப் கொடுத்ததற்காக, அதற்கு அடுத்த பந்துகளை சிராஜ் வீசும்போது ஆஸ்திரேலியா ரசிகர்கள் Booed செய்ய ஆரம்பித்துவிட்டனர். விக்கெட் எடுத்த அடுத்த பந்தையே ஸ்டார்க் பவுண்டரிக்கு விரட்ட மிகப்பெரிய சத்தத்தை ஆஸ்திரேலிய ரசிகர்கள் எழுப்பினர். ஹெட் விக்கெட்டுக்கு பிறகு 3 பவுண்டரிகள் சிராஜ் ஓவரில் அடிக்கப்பட்டது, ஒவ்வொரு பவுண்டரியின் போதும் ஆஸ்திரேலியா ரசிகர்கள் சிராஜுக்கு எதிராக சத்தமிட்டனர்.

ரசிகர்கள் Booed செய்யப்படுவது குறித்து பேசிய சுனில் கவாஸ்கர், சதமடித்த ஒரு வீரருக்கு எதிராக அப்படியான செண்ட் ஆஃப் கொடுக்கும்போது ஹோம் ரசிகர்களுடமிருந்து இதுபோல ரியாக்சன் வருவதில் ஆச்சரியமில்லை என்று கூறினார்.

முதல் டெஸ்ட் போட்டியின் போது இது பழைய ஆஸ்திரேலியா அணி இல்லை என விமர்சனம் எழுந்த நிலையில், சிராஜ் -ஹெட் மோதலுக்குபிறகு பார்டர் கவாஸ்கர் தொடரில் தீ பற்றிக்கொண்டுள்ளது.

முதல் இன்னிங்ஸில் 180 ரன்கள் அடித்த இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 128 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து விளையாடுகிறது. கேஎல் ராகுல் 7, விராட் கோலி 11 மற்றும் ரோகித் சர்மா 6 ரன்களுக்கு வெளியேறினர். ரிஷப் பண்ட் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி கடைசி பேட்ஸ்மேன்கள் ஜோடியாக விளையாடிவருகிறது.