gill web
கிரிக்கெட்

14 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்.. 50ஆவது ஒருநாள் போட்டியில் 7வது சதம் விளாசினார் சுப்மன் கில்!

இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 7வது சர்வதேச ஒருநாள் சதமடித்தார் சுப்மன் கில்.

Rishan Vengai

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இங்கிலாந்து அணி 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடுகிறது.

முதலில் நடைபெற்ற 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என வென்ற இந்திய அணி இங்கிலாந்தை மொத்தமாக ஆட்டிப்படைத்தது.

ind vs eng

அதற்குபிறகு தொடங்கிய 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டியில் வென்ற இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் உள்ள ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

7வது ODI சதமடித்தார் சுப்மன் கில்..

சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக வெற்றியுடன் செல்லும் எண்ணத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ரோகித் சர்மா 1 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்.

ஆனால் இரண்டாவது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த சுப்மன் கில் மற்றும் விராட் கோலி இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஓவருக்கு ஒன்று அல்லது இரண்டு பவுண்டரிகள் என விரட்டிக்கொண்டே இருந்த இந்த ஜோடி, இங்கிலாந்து பவுலர்களை செட்டில் ஆகவிடாமல் 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டது.

gill

விராட் கோலி அரைசதமடித்த நிலையில் 52 ரன்னில் அடில் ரசீத்தின் பந்துவீச்சில் வெளியேறினார், தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் 7வது சர்வதேச ஒருநாள் சதத்தை விளாசினார். 95 பந்தில் 14 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என துவம்சம் செய்த கில் 102 ரன்களுடன் விளையாடிவருகிறார். இந்தியா 3.2 ஓவர் முடிவில் 213 ரன்களை எட்டியுள்ளது.