சுப்மன் கில்
சுப்மன் கில் ட்விட்டர்
கிரிக்கெட்

IND vs NZ | அரைசதம் கடந்தும் அடித்து ஆடிய சுப்மன் கில்.. ரிட்டயர்டு ஹர்ட் முறையில் வெளியேறியது ஏன்?

Prakash J

இந்தியாவில் நடைபெற்று வரும் ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் இன்று (நவ.15) முதலாவது அரையிறுதிப் போட்டி நடந்து வருகிறது. இதில் மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

இன்றைய போட்டியில் டாஸ் ஜெயித்த இந்திய அணி, முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்தது. இதையடுத்து தொடக்க பேட்டர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் இன்னிங்ஸைத் தொடங்கினர். எப்போதும்போல அதிரடியில் கலக்கிய ரோகித் சர்மா, ஒருசில சாதனைகளைப் படைத்த சில நிமிடங்களிலேயே 47 ரன்களில் ஆட்டமிழந்தார்.

சுப்மன் கில்

அதன்பிறகு சுப்மன் கில்லுடன் விராட் கோலி இணைந்தார். இருவரும் நிதான ஆட்டத்தைக் கடைப்பிடித்தனர். மிகவும் பொறுமையாக விளையாடிய சுப்மன் கில், 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடி வந்த அவர் 65 பந்துகளில் 79 ரன்கள் எடுத்த நிலையில், அவருக்கு காலில் வலி ஏற்பட்டது. இதன்காரணமாக அப்படியே தரையில் அமர்ந்தார்.

இதையடுத்து, ரிட்டயர்டு ஹர்ட் (Retired Hurt) முறையில் அவர் வெளியேறினார். தற்போதைய தகவல்படி, அவருக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. எனினும், அணிக்கு தேவைப்படும் போது அவர் வந்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: WC அரையிறுதியில் தொடர்ந்து ஒற்றை இலக்கத்தில் அவுட்... வரலாற்றை மாற்றி புதிய சாதனையில் விராட் கோலி!