sanju samson web
கிரிக்கெட்

“BALL பார்த்து சுத்துறோம், சிக்சர் அடிக்கிறோம்..” சிஎஸ்கே ROAR 26 நிகழ்ச்சியில் பேசிய சாம்சன்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ROAR 26 நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பங்கேற்று சென்னை அணிக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.

Rishan Vengai

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ROAR 26 நிகழ்ச்சியில் சஞ்சு சாம்சன் பேசினார். அடுத்த இரண்டு மாதங்களில் பந்து பார்த்து சுத்தி சிக்சர் அடிக்க ஆர்வமாக உள்ளதாக கூறினார். நிகழ்ச்சியில் முன்னாள் சிஎஸ்கே வீரர்கள் மற்றும் தற்போதைய வீரர்கள் நட்பு ஆட்டத்தில் பங்கேற்றனர். மேத்யூ ஹைடன் மற்றும் சுரேஷ் ரெய்னா HALL OF FAME பட்டம் பெற்றனர்.

ஐபிஎல் தொடரின் 19வது சீசன் வரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. இதற்காக 10 அணிகளும் தீவிரமாக வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஒருபக்கம் OG சாம்பியன் அணிகளான மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் 6வது கோப்பைக்காக தயாராகிவரும் நிலையில், 17 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பை வென்ற ஆர்சிபி அணி அடுத்த கோப்பைக்காக தயாராகி வருகிறது.

dhoni

இந்தசூழலில் ரசிகர்களை எப்போதும் நெருக்கமாக வைத்துக்கொள்ளும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ரசிகர்களை கவரும் வகையில் 'ROAR26’ என்ற தலைப்பில் சில நிகழ்ச்சிகளை நேற்று ஏற்பாடு செய்திருந்தது.

சஞ்சு சாம்சனுக்கு உற்சாக வரவேற்பு..

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயணத்தை கொண்டாடும் வகையில் ROAR 2026 நிகழ்ச்சி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொண்டாட்டமாக நடைபெற்றது. கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக முன்னாள் சிஎஸ்கே வீரர்களுக்கும், இந்நாள் சிஎஸ்கே வீரர்களுக்குமான நட்பு ஆட்டம் நடைபெற்றது. இதில் முரளிதரன், மேத்யூ ஹைடன், பார்த்திவ் படேல் முதலிய சாம்பியன் வீரர்கள் பங்கேற்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில், புதியதாக HALL OF FAME அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், மேத்யூ ஹைடன் மற்றும் சுரேஷ் ரெய்னா இரண்டு வீரர்களுக்கும் பட்டம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேசிய சஞ்சு சாம்சன், இந்த அணியில் இருப்பது மிகவும் பெருமையாக உள்ளது. அடுத்த இரண்டு மாதங்கள் சென்னை அணிக்கு விளையாடுவதில் மிகவும் ஆர்வமாக உள்ளது. அடுத்த இரண்டு மாதங்களில் BALLஆ பார்த்து சுத்தூரோம் முடிஞ்ச வர சிக்சர் அடிக்கிறோம். தட்ரோம் தூக்குரோம் என்று கூறினார். அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். உலகக்கோப்பை வென்ற சஞ்சு சாம்சன், ஷிவம் துபே மற்றும் யு19 உலகக்கோப்பை வென்ற ஆயுஸ் மாத்ரே 3 பேருக்கும் தோனி நினைவு பரிசு வழங்கினார்.