சிஎஸ்கே ஜெர்சி அணிந்த சஞ்சு சாம்சன் web
கிரிக்கெட்

”ஒரு சாம்பியனை போல..” சிஎஸ்கே ஜெர்சி அணிந்தபோது எப்படி இருந்தது..?? சஞ்சு சாம்சன் பேச்சு!

சென்னை சூப்பர் கிங்ஸின் மஞ்சள் நிற ஜெர்சியை அணிந்தபோது ஏற்பட்ட உணர்வு குறித்து பேசியுள்ளார் புதிய வரவான சஞ்சு சாம்சன்..

Rishan Vengai

2026 ஐபிஎல் ஏலம் வரும் டிசம்பர் 16-ம் தேதி நடக்கவிருக்கும் நிலையில், அனைத்து ஐபிஎல் அணிகளும் தங்களுடைய டிரேடிங் விவரம் மற்றும் தக்கவைப்பு வீரர்கள் விவரங்களை கடந்த 15-ம் தேதி அறிவித்தனர்..

ஜடேஜா வெளியேறினால் சிஎஸ்கேவில் உருவாகும் 8 பிரச்னைகள்

அதன்படி 12 ஆண்டுகளாக சென்னை அணியின் ஒரு அங்கமாக இருந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வர்த்தகம் செய்துவிட்டு, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனை அணிக்கும் கொண்டுவந்துள்ளது சிஎஸ்கே..

jadeja - dhoni - sanju samson

மேலும் ரச்சின் ரவீந்திரா, பதிரானா, தீபக் ஹூடா, விஜய் சங்கர் போன்ற பல்வேறு வீரர்களும் சிஎஸ்கே அணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்..

ஒரு சாம்பியனை போல உணர்ந்தேன்..

2012 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய ரவீந்திர ஜடேஜா அணியிலிருந்து வெளியேறியது வருத்தமாக இருந்தாலும், புதிய வரவாக வந்திருக்கும் சேட்டன் சஞ்சு சாம்சனை சிஎஸ்கே ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்..

சஞ்சு சாம்சனும் சிஎஸ்கேவில் இணைந்தது குறித்த தன்னுடைய உணர்வுகளையும், சிஎஸ்கே ஜெர்சி அணிந்தபோது ஏற்பட்ட உணர்வு குறித்தும் பேசியுள்ளார். சிஎஸ்கே வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்றில் பேசியிருக்கும் சஞ்சு சாம்சன், ”மஞ்சள் நிற ஜெர்சியை அணியும் நாளிற்காக காத்திருந்தேன், அடர்ந்த நிறத்திலான ப்ளூ, ப்ளாக், ப்ரவ்ன் ஜெர்சிகளை அணிந்ததைவிட மஞ்சள் நிற ஜெர்சியை அணிவது புத்துணர்ச்சியாக இருக்கிறது.. இதை அணிந்தபோது வித்தியாசமாகவும், ஒரு சாம்பியனை போலவும் உணர்ந்தேன்” என பேசியுள்ளார்..