MS Dhoni
MS Dhoni Twitter
கிரிக்கெட்

“தோனி சிறுபிள்ளை போல் அழுதார்; ஹர்திக், பண்ட் கண்களில் நீர் இருந்தது”-2019 SEMI பற்றி சஞ்சய் பங்கர்!

Rishan Vengai

2019 உலகக்கோப்பையில் இந்தியா அல்லது இங்கிலாந்து இரண்டு அணியில் ஒரு அணி தான் கோப்பை வெல்லும் என சொல்லப்பட்டது. அதற்கேற்றார் போல் இரண்டு அணிகளும் லீக் போட்டிகளில் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதிவரை முன்னேறி இருந்தன. ஆனால் அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய இந்திய அணி, பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டாலும் பேட்டிங்கில் சொதப்பியது. 240 ரன்கள் என்ற எளிதான இலக்கை துரத்திய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Rohit Sharma

தோனி மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் இறுதிவரை களத்தில் இருக்கும்போது எப்படியும் இந்தியா வெற்றியை எடுத்துவந்துவிடும் என எல்லோரும் எதிர்ப்பார்த்தனர். தோனி 50 ரன்களுடனும், ஜடேஜா 77 ரன்களுடனும் களத்தில் இருக்க, கடைசி 2 ஓவரில் 31 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது சிக்சர் அடித்து தோனி நம்பிக்கையளிக்க, அவரை ஒரு அற்புதமான ரன் அவுட்டில் வெளியேற்றிய மார்டின் குப்தில் இந்தியாவின் நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். முடிவில் 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை சந்தித்தது.

MS Dhoni

அரையிறுதிப்போட்டியில் தோல்வியடைந்த பிறகு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி கண்களில் கண்ணீர் இருந்தது. வீரர்கள் மட்டுமல்லாமல் கேமராமேன், ரசிகர்கள் முதற்கொண்டு அனைவரின் கண்களிலும் நீர் தேங்கியிருந்தது. ஒரு மோசமான நாளாக இருந்த அன்று டிரெஸ்ஸிங் ரூமில் என்ன நடந்தது என்று பேட்டிங் பயிற்சியாளராக இருந்த சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய வீரர்கள் அனைவரும் சிறுகுழந்தைகளை போல் அழுதனர்!

இன்றைய இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையேயான உலகக்கோப்பை போட்டியில் வர்ணனையாளராக இருந்த சஞ்சய் பங்கர், 2019 உலகக்கோப்பை செமி பைனல் தோல்விக்கு பிறகு என்ன நடந்தது என பகிர்ந்துள்ளார்.

Sanjay Bangar

அதுகுறித்து அவர் பேசுகையில், “2019 உலகக்கோப்பை தொடர் முழுக்க சிறப்பான கிரிக்கெட்டை விளையாடிய இந்தியாவின் அனைத்து வீரர்களுக்கும் அது ஒரு ஹார்ட் பிரேக்கிங் தருணமாகும். லீக் சுற்றில் நாங்கள் 7 போட்டிகளில் வெற்றி பெற்றும், அப்படி தோல்வியை சந்தித்தது யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அனைத்து வீரர்களும் குழந்தைகளைப் போல அழுதனர். எம்.எஸ். தோனி சிறுபிள்ளை போல அழுதார். ஹர்திக் பாண்டியா மற்றும் ரிஷப் பந்த் இருவரின் கண்களிலும் கண்ணீர் வடிந்தது. இப்படி தான் அன்று டிரஸ்ஸிங் ரூம் இருந்தது” என தெரிவித்துள்ளார்.