og csk vs new csk match web
கிரிக்கெட்

’OG சிஎஸ்கே vs ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே’ - இன்று சென்னை ரசிகர்களுக்கு விருந்து!

முன்னாள் சிஎஸ்கே வீரர்களுடன் இந்நாள் சிஎஸ்கே வீரர்கள் பங்கேற்கும் நட்பு ஆட்டம் இன்று மாலை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ளது.

Rishan Vengai

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 'ROAR26' நிகழ்ச்சியில், முன்னாள் வீரர்கள் மற்றும் தற்போதைய வீரர்கள் நட்பு ஆட்டத்தில் மோதுகின்றனர். சுரேஷ் ரெய்னா, மேத்யூ ஹைடன் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் பங்கேற்க, இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானின் இசைக்குழு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி, ரசிகர்களுக்கு 2026 ஐபிஎல் தொடருக்கு முன் ஒரு விருந்தாக அமைந்துள்ளது.

நாடு முழுவதும் 5 மாநிலங்களுக்கான தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிய நிலையில், மறுபுறம் மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ள ஐபிஎல் தொடரும் 10 அணிகளிடம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. 10 அணிகளும் தீவிரமாக வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

குஜராத்தை தோற்கடித்தது சிஎஸ்கே

ஒருபக்கம் OG சாம்பியன் அணிகளான மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் 6வது கோப்பைக்காக தயாராகிவரும் நிலையில், 17 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பை வென்ற ஆர்சிபி அணி அடுத்த கோப்பைக்காக தயாராகி வருகிறது. வலைப்பயிற்சியில் விராட் கோலி சக வீரர்களுக்கு உத்வேகம் அளிப்பதும், சிஎஸ்கேவில் சஞ்சு சாம்சனுடன் தோனி உரையாடுவதும் என தொடர்ந்து வீரர்கள் வலுவாக தயாராகி வருகின்றனர்.

2025 ஆர்சிபி அணி

இந்தசூழலில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம், ரசிகர்களை கவரும் வகையில் 'ROAR26’ என்ற தலைப்பில் சில நிகழ்ச்சிகளை இன்று ஏற்பாடு செய்துள்ளது.

முன்னாள் வீரர்கள் பங்கேற்கும் நட்பு ஆட்டம்..

ஞாயிற்றுக்கிழமையான இன்று ‘ROAR 26’ என்ற தலைப்பில் சில நிகழ்ச்சிகளுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி மாலை 4.30 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வலைப்பயிற்சி உடன், 5.30 மணிக்கு சிஎஸ்கே அணியின் OG முன்னாள் வீரர்களுடன் தற்போதைய ருதுராஜ் தலைமையிலான வீரர்கள் மோதும் நட்பு ஆட்டம் நடைபெறவிருக்கிறது.

இந்த நட்பு ஆட்டத்தில் சிஎஸ்கேவின் முன்னாள் வீரர்களான சுரேஷ் ரெய்னா, மேத்யூ ஹைடன், முரளி விஜய், டிவைன் பிராவோ, பத்ரிநாத் முதலிய வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

அதேபோல மாலை 7 மணிக்கு ஆஸ்கர் விருது வென்று இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானின் இசைக்குழு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ‘ROAR 26’-ன் சிறப்பாக நடிகர் சிவகார்த்திகேயனும் பங்கேற்பார் என தெரிகிறது. இந்த செய்தி சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை 2026 ஐபிஎல் தொடருக்கு முன் தயார்படுத்துவதாக அமைந்துள்ளது.