2026 ஐபிஎல் மினி ஏலத்தில் சுரேஷ் ரெய்னா, சிஎஸ்கேவிற்காக 5 புதிய வீரர்களை தேர்வு செய்தார். கேமரூன் க்ரீன், லியாம் லிவிங்ஸ்டன், வெங்கடேஷ் ஐயர் போன்ற ஆல்ரவுண்டர்கள் ஏலத்தில் இருந்தபோதும் சுரேஷ் ரெய்னாவின் தேர்வு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது..
2026 ஐபிஎல்லுக்கான மினி ஏலம் நாளை மதியம் 2.30 மணிக்கு அபுதாபியில் நடைபெற உள்ளது. பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஆண்ட்ரே ரஸ்ஸல், க்ளென் மேக்ஸ்வெல், ஃபேப் டூபிளசி, மொயின் அலி போன்ற வீரர்கள் ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய நிலையில், 2026 ஐபிஎல் ஏலம் பல புதிய வீரர்கள் மற்றும் இளம் வீரர்களுக்கு நல்ல வாய்ப்பை வழங்கியுள்ளது.’
அதிலும் ஆல்ரவுண்டர்களான கேமரூன் க்ரீன், லியாம் லிவிங்ஸ்டன், வெங்கடேஷ் ஐயர் போன்ற ஆல்ரவுண்டர்களுக்கு அதிக தொகைக்கு செல்ல வாய்ப்பு இருப்பதால் அதிக எதிர்ப்பாப்பு நிலவுகிறது. 2026 ஐபிஎல் ஏலத்தில் கேகேஆர் 64.3 கோடி பர்ஸ் தொகையுடனும், சிஎஸ்கே 43.4 கோடி பர்ஸ் தொகையுடனும் வலுவான போட்டியை ஏற்படுத்த உள்ளன.
இந்தசூழலில் பல்வேறு தளங்களிலும் யார் எந்த அணிக்கு செல்வார்கள் என்ற பேச்சும், மாதிரி ஏலமும் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நடத்திய மோக் ஆக்சனில் சிஎஸ்கேவிற்காக கலந்துகொண்ட சுரேஷ் ரெய்னா, யாரும் கணிக்காத 5 வீரர்களை ஏலத்தில் எடுத்தார்.
நடைபெற்ற ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மோக் ஆக்சனில் சிஎஸ்கே அணிக்காக சுரேஷ் ரெய்னா, கேகேஆர் அணிக்காக உத்தப்பா, ஆர்சிபி அணிக்காக அனில்கும்ப்ளே, டெல்லிக்காக கைஃப், ராஜஸ்தானுக்காக ஆகாஷ் சோப்ரா, குஜராத்துக்காக புஜாரா, மும்பைக்காக அபினவ் முகுந்த், ஹைத்ராபாத்துக்காக பத்ரிநாத், லக்னோவிற்காக இர்ஃபான் பதான், பஞ்சாப்புக்காக சஞ்சய் பங்கர் ஆகியோர் ஏலத்தில் பங்கேற்றனர்..
பரபரப்பாக நடைபெற்ற ஏலத்தில் சிஎஸ்கே அணிக்கா கலந்துகொண்ட ரெய்னா, ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டர் காம்ரூன் க்ரீனை எடுக்க 30 கோடி வரை ஏலம் செய்தார். ஆனால் 30.50 கோடி ரூபாய்க்கு கேகேஆர்க்காக ராபின் உத்தப்பா க்ரீனை ஏலத்தில் தட்டிச்சென்றார்.
சிஎஸ்கே அணிக்கு மிடில் ஆர்டர் வீரர், ஃபாஸ்டர் பவுலர், ஸ்பின்னர் போன்ற தேவையிருக்கும் நிலையில், அந்த இடங்களுக்கு மிடில் ஆர்டர் பேட்டராக சர்பராஸ் கானை 7 கோடிக்கு ஏலத்தில் எடுத்தார் ரெய்னா.. அவரின் இந்த தேர்வு கணிக்க முடியாததாக இருந்தது, அதற்கு விளக்கம் கொடுத்த ரெய்னா சர்பராஸ்கானின் தற்போதைய சிறந்த ஃபார்மை கவனத்தில் வைத்து எடுத்ததாக தெரிவித்தார். தற்போது நடந்துவரும் சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் 47 பந்தில் சர்பராஷ் கான் சதமடித்திருந்த குறிப்பிடத்தக்கது.
வேகப்பந்துவீச்சு ஆப்சனாக தென்னாப்பிரிக்காவின் ஆன்ரிச் நார்கியாவை 7.50 கோடிக்கும், இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஷிவம் மாவியை 2.50 கோடிக்கும் ஏலம் எடுத்தார் ரெய்னா. சுழற்பந்துவீச்சு ஆப்சனுக்காக இலங்கையின் அனுபவம் வாய்ந்த ஸ்பின்னரான வனிந்து ஹசரங்காவை 2 கோடிக்கும், பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ராகுல் சாஹரை 10 கோடிக்கும் விலைக்கு வாங்கினார் ரெய்னா.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ரெய்னாவின் தேர்வு ரசிகர்களுக்கு சப்ரைஸாக இருந்தாலும், நாளை நடக்கும் ஏலத்தில் சென்னை அணி இவற்றில் எந்த வீரருக்கு செல்லும் என்பதை பொறுத்துதான் பார்க்கவேண்டும்..