ரச்சின் ரவிந்திரா
ரச்சின் ரவிந்திரா pt web
கிரிக்கெட்

உலகக்கோப்பையில் ரசிகர்களின் மனங்களை வென்ற ரச்சின் ரவீந்திராவை ஏலத்தில் தட்டி தூக்கியது சிஎஸ்கே!

Angeshwar G

17வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதையடுத்து, ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இன்று துபாயில் நடைபெற்று வருகிறது. முதல்முறையாக இந்த ஏலம் வெளிநாட்டில் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி மதியம் 1 மணிக்கு வீரர்களுக்கான மினி ஏலம் தொடங்கியது.

ரோவ்மேன் பாவல் ராஜஸ்தான் அணிக்காக 7.40 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். முன்னதாக ரோவ்மன் பாவெல் கடந்தாண்டு ஐபிஎல்லில் டெல்லி அணிக்காக ஆடினார். 2023 ஆம் ஆண்டில் மொத்தம் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடி 7 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து அணியின் ஹாரி ப்ரூக் 4 கோடிக்கு டெல்லி அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். 2023 ஆம் ஆண்டு ஹைதராபாத் அணிக்காக 13.25 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஹைதராபாத் அணிக்காக ஆடிய ஹாரி ப்ரூக் 11 ஆட்டத்தில் விளையாடி கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில் மட்டும் சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய அணியின் ட்ராவிஸ் ஹெட் ஹைதராபாத் அணிக்காக 6.80 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். கடந்தாண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் அடிப்படை விலையான 2 கோடிக்கு யாரும் ட்ராவிஸ் ஹெட்டை ஏலத்தில் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா அணியின் வனிந்து ஹசரங்கா ஹைதராபாத் அணிக்கு 1.50 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நடந்த ஏலத்தில் ரூ.10.75 கோடிக்கு பெங்களூர் அணி வாங்கி இருந்தது. 3 முறை ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ள ஹசரங்கா மொத்தமாகவே 72 ரன்களை எடுத்துள்ளார். 26 போட்டிகளில் மொத்தமாக 35 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திராவை 1.80 கோடிக்கு சென்னை அணி வாங்கியுள்ளது. 23 வயதான ரச்சின் ரவீந்திரா நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் தனது முதல் போட்டியிலேயே சதமடித்தவர். 9 போட்டிகளில் 565 ரன்களை குவித்து இருந்தார். அதில் 3 சதம் 2 அரைசதம் அடக்கம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வந்து பின்னர் கொல்கத்தா அணிக்கு மாறியிருந்த ஷர்துல் தாக்கூர் மீண்டும் தாய் அணிக்கு திரும்பியுள்ளார். சென்னை அணி அவரை 4 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளார்.