பிரின்ஸ் யாதவ் - குர்னூர் ப்ரார் - மனவ் சுதர் web
கிரிக்கெட்

இந்திய ODI அணியில் பிரின்ஸ் யாதவிற்கு வாய்ப்பு.. இஷான் கிஷன் கம்பேக்! 3 Uncapped வீரர்கள்!

ஆப்கானிஸ்தானிற்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Rishan Vengai

ஆப்கானிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட், ஒருநாள் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில், ரோகித் சர்மா, விராட் கோலி தொடரில் பங்கேற்கிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இஷான் கிஷன் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார். ஜடேஜா, ஷமி ஆகியோர் விலக்கப்பட்ட நிலையில், பிரின்ஸ் யாதவ், ஹர்ஷ் துபே, குர்னூர் ப்ரார் போன்ற புதிய முகங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஜூன் மாதம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் ஆப்கானிஸ்தான் அணி 1 டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவிருக்கிறது. இந்தநிலையில் இத்தொடருக்கான இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

கம்பீர் - சுப்மன் கில்

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இடம்பெற்றுள்ளனர். இஷான் கிஷன் நீண்ட இடைவெளிக்கு பிறகு கம்பேக் கொடுத்துள்ளார். ஏற்கனவே ஜடேஜாவிற்கு மாற்று ஆப்சன்கள் பயன்படுத்த விரும்புவதாக அகர்கர் தெரிவித்திருந்த நிலையில், இத்தொடரில் அவர் இடம்பெறவில்லை.

prince yadav

புதியவரவாக முதல்தர போட்டிகள் மற்றும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டுவரும் வேகப்பந்துவீச்சாளர் பிரின்ஸ் யாதவ் ஒருநாள் போட்டியில் இடம்பிடித்துள்ளார். அவர் தவிர இன்ஃபார்மில் இருந்துவரும் ஆல்ரவுண்டர் ஹர்ஷ் துபே, வேகப்பந்துவீச்சாளர் குர்னூர் ப்ரார் இடம்பிடித்துள்ளனர்.

குர்னூர் ப்ரார்

ஆப்கானிஸ்தான் தொடருக்கான இந்திய ODI அணி:

சுப்மன் கில் (கேப்டன்), ரோகித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் (துணைக் கேப்டன்), கேஎல் ராகுல் (WK), இஷான் கிஷன் (WK), ஹர்திக் பாண்டியா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, பிரின்ஸ் யாதவ், குர்னூர் பிரார், ஹர்ஷ் துபே.

ஷமிக்கு வாய்ப்பில்லை..

ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டுவரும் முகமது ஷமி இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்புவார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது. ஆனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் ஷமிக்கு இடம் கிடைக்கவில்லை. மாறாக மனவ் சுதர், குர்னூர் ப்ரார் மற்றும் ஹர்ஷ் துபே என 3 புதிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

manav suthar

ஆப்கானிஸ்தான் தொடருக்கான இந்திய TEST அணி:

சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் (கீப்பர்), சாய் சுதர்சன், ரிஷப் பந்த் (WK), தேவ்தத் படிக்கல், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, மனவ் சுதர், குர்னூர் பிரார், ஹர்ஷ் துபே, துருவ் ஜூரல் (WK).