praveen kumar
praveen kumar web
கிரிக்கெட்

"லலித் மோடி என் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துடுவேன் என மிரட்டினார்"- முன்னாள் RCB வீரர் பகீர் தகவல்

Rishan Vengai

இந்திய அணியில் பந்தை ஸ்விங் செய்யக்கூடிய பவுலர்கள் மிகவும் குறைவு. இப்போதும் அதிகமாக பந்தை திருப்பக்கூடிய இந்திய பவுலர் யார் என்ற கேள்வி வந்தால் நம் நினைவில் நிற்பதெல்லாம் புவனேஷ்வர் குமார் என்ற பெயர் தான் முதலில் வந்து நிற்கும். ஜவஹல் ஸ்ரீநாத், ஜாகீர் கான் என்ற ஜாம்பவான்கள் ஸ்விங் செய்தாலும் புவனேஷ்வர் குமார் அளவிற்கு ஸ்விங் செய்யக்கூடிய பவுலர்கள் கிடையாது. அதனால் தான் இதுவரை சிறந்த ஸ்விங் ஸ்விங் செய்யக்கூடிய இந்திய பவுலர் என்றால் புவனேஷ்வர் குமார் முதலில் வந்து நிற்கிறார்.

ஆனால் புவனேஷ்குமாருக்கு முன்னதாகவே இந்திய அணி கண்டுபிடித்த ஒரு மிகச்சிறந்த ஸ்விங் பவுலர் என்றால், அது பிரவீன் குமார் தான். பந்தை இரண்டு பக்கமும் அற்புதமாக ஸ்விங் செய்யக்கூடிய இந்திய பவுலராக இருந்த அவர், மிகப்பெரிய இடத்திற்கு வருவார் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் இருந்தது. ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை அதிகமான போட்டிகளில் விளையாடாமலேயே 2018ம் ஆண்டு அனைத்து போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்தார்.

praveen kumar

இந்நிலையில் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை குறித்து பேசியிருக்கும் பிரவீன் குமார், சில கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

என் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துவிடுவதாக மிரட்டினார்கள்!

6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு 5 விக்கெட்டுகளுடன் 27 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள பிரவீன் குமார், 68 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 77 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 2017 வரை ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அவர், 119 போட்டிகளில் 90 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் 2008ம் ஐபிஎல் தொடர் குறித்து பேசியிருக்கும் அவர், “2008-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் முதலில் நான் RCB அணிக்காக விளையாட விரும்பவில்லை. ஏனென்றால் பெங்களூர் எனது சொந்த ஊரான மீரட்டிலிருந்து வெகு தொலைவில் இருந்தது. உடன் ஆங்கிலத்தில் பேசும் பிரச்னையும், உணவு பிரச்னையும் எனக்கு பெங்களூரில் இருந்தது. அதனால் நான் பெங்களூருக்காக விளையாடாமல், எனது ஊருக்கு அருகில் இருந்த டெல்லிக்காக விளையாட விரும்பினேன். எனது குடும்பத்தை பார்க்க அடிக்கடி ஊருக்க செல்ல முடியும் என்பதால் டெல்லி அணிக்காகவே விளையாட விரும்பினேன்.

praveen kumar

ஆனால் என்னுடைய ஒப்பந்தத்தின் போது என்னிடம் சொல்லாமலேயே கையெழுத்து வாங்கினார். நான் அப்போது அவர்களிடம் நான் பெங்களூருக்கு விளையாட விரும்பவில்லை, டெல்லிக்காக தான் விளையாட விரும்புகிறேன் என்று கூறினேன். அப்போது போனில் அழைத்து பேசிய அப்போதைய ஐபிஎல் கமிஷ்னர் லலித் மோடி, பெங்களூர் அணிக்காக நீ விளையாடவில்லை என்றால் உன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை முடித்து விடுவேன் என மிரட்டினார். வேறு வழியில்லாமல் நான் பெங்களூரு அணிக்காக விளையாடினேன்” என்று தன்னுடைய கசப்பான அனுபவத்தை லல்லன்டோப் உடனான சமீபத்திய உரையாடலில் பேசியிருப்பதாக டைம் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

praveen kumar

2008 முதல் மூன்று ஆண்டுகள் RCB அணிக்காக விளையாடி பிரவீன் குமார், 47 போட்டிகளில் விளையாடி 41 விக்கெட்டுகளுடன் சிறப்பாக முடித்தார்.