Pat Cummins
Pat Cummins X
கிரிக்கெட்

ஐபிஎல் வரலாற்றில் இதுதான் உச்சம்! 20 கோடி வரை சென்ற RCB! 20.5 கோடிக்கு பேட் கம்மின்ஸை தூக்கிய SRH!

Rishan Vengai

2024 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலாம் துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கத்தில் நடைபெற்றுவருகிறது. இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கிய வீரர்கள் ஏலம் தொடங்கியதில் இருந்தே கலைக்கட்ட தொடங்கியது. யாரும் எதிர்ப்பார்க்காத சில வீரர்கள் அதிக விலைக்கு சென்றுள்ளன.

20.50 கோடி! இதுவரை இல்லாத விலைக்கு சென்ற பாட் கம்மின்ஸ்!

ஐபிஎல் ஏலத்தின் வரலாற்றில் இதுவரை எந்த வீரரும் செல்லாத அதிகப்படியான விலைக்கு சென்றுள்ளார், இந்திய மண்ணில் 2023 ஒருநாள் உலகக்க்கோப்பையை வென்றவரான பாட் கம்மின்ஸ்.

2 கோடி அடிப்படை விலைக்கு வந்த பாட் கம்மின்ஸுக்கு முதலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் போட்டிப்போட்டன. கடைசிவரை விட்டுக்கொடுக்காத சென்னை சூப்பர் கிங்ஸ் 4.8 கோடிவரை ஏலத்திற்கு சென்றது. அதற்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் விலக, போட்டிக்குள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வந்தது. CSK மற்றும் RCB இரண்டு அணிகளுக்குமான போட்டி 7.8 கோடி வரை சென்றது. அதற்கு மேல் பாட் கம்மின்ஸுக்கான போட்டியிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விலகியது.

Pat Cummins

CSK அணி விலகியதும் RCBக்கு போட்டியாக சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி நுழைந்தது. ஆனால் இந்த இரண்டு அணிகளுக்கும் இந்த வீரர் முக்கியமானவர் என்பதால் ஏலாம் 15 கோடிவரை நிற்காமல் சென்றது. அதற்கு பிறகு எந்த அணியாவது விலகும் என நினைத்தாலும், இவ்விரு அணிகளும் ஏலத்தின் போட்டியில் நிற்கவில்லை. இந்த போட்டி 20 கோடிக்கு சென்று நின்றது. 20 கோடிக்கு ஆர்சிபி கேட்டதும் எப்படியும் ஹைதராபாத் அணி விலகும் என்று நினைத்தால், 20.5 கோடிக்கு சென்றது SRH அணி. ஆர்சிபி அணி இந்த போட்டியிலிருந்து விலகியதால், SRH அணி 20.5 கோடிக்கு பாட் கம்மின்ஸை தட்டிச்சென்றது.

இந்த ஏலம் ஐபிஎல் ஏல வரலாற்றில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஏலமாகும், இதற்கு முன் சாம் கரன் அதிக விலைக்கு போன 18.25 கோடியே அதிகவிலைக்கு போன ஏலமாக இருந்த நிலையில், தற்போது அதை உடைத்துள்ளார் பாட் கம்மின்ஸ்.

இன்றைய ஏலத்தில் இதுவரை அதிகவிலைக்கு சென்ற வீரர்கள்!

பாட் கம்மின்ஸ் - 20.5 கோடி - SRH

டேரில் மிட்செல் - 14 கோடி - CSK

ஹர்சல் பட்டேல் - 11.75 கோடி - PBKS

ரோவ்மன் பவல் - 7.4 கோடி - RR

Daryl Mitchell

டிராவிஸ் ஹெட் - 6.8 கோடி - SRH

ஜெரால்ட் கோட்ஸீ - 5 கோடி - MI

ஹாரி ப்ரூக் - 4 கோடி - DC

ஷர்துல் தாக்கூர் - 4 கோடி - CSK

ரச்சின் ரவீந்திரா - 1.8 கோடி - CSK