2026 டி20 உலகக்கோப்பை தொடங்க இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இந்திய அணியின் வெற்றிக்கு அடித்தளம் போட்டவர் ரோகித் சர்மா என ரிஷப் பண்ட் பாராட்டியுள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் இந்தியா 59 டி20 போட்டிகளில் 51 வெற்றிகளை பெற்றுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி வலிமையாக உள்ளது.
2026 டி20 உலகக்கோப்பை தொடங்க இன்னும் 2 நாட்களே மீதமிருக்கும் நிலையில், 20 அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளில் 59 டி20 போட்டிகளில் வென்றிருக்கும் இந்திய அணி 51 வெற்றிகள், 8 தோல்விகளுடன் வலிமையாக வருகிறது.
சூர்யகுமார் யாதவ் தலைமையில் உள்ளூர் மற்றும் வெளிநாடு என அனைத்து டி20 தொடர்களிலும் தோல்வியே இல்லாமல் வெற்றிநடை போட்டுவரும் இந்திய அணியில், சிக்ஸ் ஹிட்டர்கள், ஃபினிசிங் வீரர்கள், தலைசிறந்த பந்துவீச்சாளர்கள் என அனைவரும் இடம்பெற்றுள்ளனர்.
குறிப்பிட்டு சொல்லும்படியான குறைகள் என இந்திய அணியில் எதுவும் இல்லாமல் இருந்துவருகிறது, ஒரே கவலையாக இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவின் ஃபார்ம் இருந்த நிலையில், தற்போது அவரும் அவருடைய ஃபார்மிற்கு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் எல்லாமே இந்திய அணியே கோப்பை வெல்லும் என்ற ஆருடத்தை வழங்கும் நிலையில், தற்போதைய டி20 அணியின் வெற்றிக்கு அடித்தளம் போட்டவர் ரோகித் சர்மா என ரிஷப் பண்ட் புகழ்ந்துள்ளார்.
இந்தியாவின் டி20 அணி சாதித்துவரும் நிலையில், தற்போதைய அணியின் சக்சஸ் ஃபார்முலாவை கண்டுபிடித்தவர் ரோகித் சர்மா என ரிஷப் பண்ட் பாராட்டி பேசியுள்ளார்.
இதுகுறித்து பேசியிருக்கும் பண்ட், "நாங்கள் 2022 உலகக் கோப்பையை விளையாடி தோற்றோம். அதன் பிறகு, இந்தியாவின் கிரிக்கெட் விளையாடும் முறை மாறியது. அதற்கு முன்பே, நாம் வேறு வழியில் விளையாட வேண்டும் என்ற எண்ணம் ஏற்கனவே தொடங்கிவிட்டது. ரோகித் பாய் அடிக்கடி விவாதங்களில் இதைப் பற்றிப் பேசினார். விஷயங்கள் எவ்வாறு மாற வேண்டும் என்பதில் எப்போதும் கவனம் செலுத்தப்பட்டது. அதற்கு பொறுப்பேற்று அதை நானே செய்கிறேன் என்று அவர் கூறினார். அவர் அணியின் அணுகுமுறையை மாற்றினார், இன்று இந்தியா இப்போது எப்படி விளையாடுகிறது என்பதை நீங்கள் தெளிவாகக் காணலாம்" என்று பண்ட் பேசியுள்ளார்.