ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தி வெற்றி பெற்றது.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இந்தியா, இலங்கை, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிய நிலையில், பாகிஸ்தான் இந்தியாவிடமும், இலங்கை வங்கதேசத்திடமும் தோல்வியுற்றன. இரண்டு தோல்விக்குப் பிறகு வெல்லவேண்டிய முக்கியமான போட்டியில் இலங்கை - பாகிஸ்தான் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின.
பரபரப்பாக தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அவ்வணியின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் தொடக்கம் முதலே இலங்கை அணி விக்கெட்களை இழந்தது. குறிப்பாக, அந்த அணி 58 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்த தத்தளித்தது. அப்போது களமிறங்கிய கமிந்து மெண்டீஸ் நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அவரின் 50 ரன்களுடன் இலங்கை அணி இலங்கை அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 133 ரன்களைச் சேர்த்தது. பாகிஸ்தான் தரப்பில் ஷகீன் அப்ரிடி 3 விக்கெட்களை வீழ்த்தினார். அடுத்து விளையாடிய பாகிஸ்தான், 18 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து, 138 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியில், சாஹிப்ஸாதா ஃபர்ஹான் 24 ரன்களும், ஹூசைன் தல்த் 32 ரன்களும் முகம்மது நவாஸ் 38 ரன்களும் எடுத்து வெற்றிக்கு உதவினர். இந்த வெற்றியின் மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை பாகிஸ்தான் அணி பெற்றுள்ளது.