சச்சின் - அக்தர்
சச்சின் - அக்தர் Twitter
கிரிக்கெட்

அக்தரின் வேகம் Vs சச்சின்..? மீண்டும் அதிரப்போகும் களம்! ரோட் சேஃப்டி தொடரில் பாகிஸ்தான் அணி!

Rishan Vengai

சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 'ரோட் சேஃப்டி வேர்ல்ட் சீரிஸ்' டி20 தொடரானது நடத்தப்பட்டு வருகிறது. உலக கிரிக்கெட் ஜாம்பவான் வீரர்கள் பலரும் பங்குபெற்று விளையாடும் இந்த தொடரில் இந்தியா லெஜண்ட்ஸ், ஆஸ்திரேலியா லெஜண்ட்ஸ், இங்கிலாந்து லெஜண்ட்ஸ், இலங்கை லெஜண்ட்ஸ், வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ், நியூசிலாந்து லெஜண்ட்ஸ், தென்னாப்பிரிக்கா லெஜண்ட்ஸ் மற்றும் வங்கதேசம் லெஜண்ட்ஸ் முதலிய 8 அணிகள் விளையாடுகின்றன.

Road Safety Series

2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடரானது முதலிரண்டு சீசன்களாக இந்தியாவில் நடத்தப்பட்ட நிலையில், மூன்றாவது சீசன் இங்கிலாந்தில் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான தொடரில் பாகிஸ்தான் அணியும் இணையவிருப்பதாகவும், அதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒப்புதல் வழங்கியிருப்பதாகவும் கிரிக் இன்ஃபோ செய்திவெளியிட்டுள்ளது.

சச்சினை எதிர்கொண்டு விளையாடவிருக்கும் பாகிஸ்தான்!

ரோட் சேஃப்டி தொடரில் சச்சின் டெண்டுல்கர், கெவின் பீட்டர்சன், சனத் ஜெயசூர்யா, ஷேன் வாட்சன், திலகரத்னே தில்ஷான், யுவராஜ் சிங், பிரையன் லாரா, ஜான்டி ரோட்ஸ், ஷேன் பாண்ட் மற்றும் சுரேஷ் ரெய்னா போன்ற ஜாம்பவான் வீரர்கள் விளையாடிவரும் நிலையில், தற்போது பாகிஸ்தான் ஜாம்பவான் வீரர்களும் பங்குபெற்று விளையாடவிருக்கின்றனர். இது இந்திய ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

akhtar - sachin

பழைய இந்திய அணி மற்றும் பழைய பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மோதல் என்பதையெல்லாம் தாண்டி, பாகிஸ்தானுக்கு எதிராக சச்சின் விளையாடப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் ஒருவேளை ஷோயப் அக்தர் பங்கேற்றால், சச்சின் மற்றும் அக்தருக்கு இடையேயான மோதல் எப்படியிருக்கும் என்ற ஆவல் அதிகரித்துள்ளது. இந்திய அணியில் யுசஃப் பதான், இர்ஃபான் பதான், நாமன் ஓஜா, வினய் குமார், ஸ்டூவர்ட் பின்னி போன்ற வீரர்களும் விளையாடிவருகின்றனர்.

Road Safety Series

2020-2021, 2022 என இரண்டு சீசன்களின் இறுதிப்போட்டியிலும் இந்தியா மற்றும் இலங்கை லெஜண்ட்கள் மோதிய நிலையில் இரண்டிலும் இந்திய அணியே வெற்றிபெற்றுள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான தேதி இன்னும் உறுதிசெய்யப்படாத நிலையில், செப்டம்பர் மாதம் போட்டி நடைபெறும் என்ற பேச்சுகள் எழுந்துள்ளன.