உலகக்கோப்பைக்கு முன்னதாக 7 அடங்கிய முத்தரப்பு தொடர் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. . இதில் பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து அணிகள் பங்கேற்றுள்ளன.
முதல் போட்டி பாகிஸ்தான் ராவல்பிண்டி மைதானத்தில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற நிலையில், 305 ரன்கள் குவித்த பாகிஸ்தான் 37 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்தது.
இந்தசூழலில் இரண்டாவது ஒருநாள் போட்டி இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக நவாஸ் 79 ரன்கள், அர்ஃபாத் மினாஸ் 59 ரன்கள் அடித்தனர்.
303 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய இங்கிலாந்து அணி முதல் விக்கெட்டுக்கே 91 ரன்கள் அடித்து வலுவாகவே தொடங்கியது. ஆனால் அதற்குபிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகளை சரியவிட்ட இங்கிலாந்து தடுமாறியது. அதற்குபிறகு பந்துவீச வந்த பாகிஸ்தான் ஸ்பின்னர் அர்ஃபாத் மினாஸ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்தை நசுக்கினார். 215 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.