இந்தியா யு19 - பாகிஸ்தான் யு19 cricinfo
கிரிக்கெட்

யு19 ஆசியக்கோப்பை ஃபைனல்| 172 ரன்கள் விளாசிய பாகிஸ்தான் வீரர்.. இந்தியாவிற்கு 348 ரன்கள் இலக்கு!

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவிற்கு 348 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான் அணி..

Rishan Vengai

2025 யு19 ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் வீரர் சமீர் மனாஸ் 172 ரன்கள் குவித்து, இந்தியாவிற்கு 348 ரன்கள் இலக்கை நிர்ணயித்தார். இந்தியா வெற்றிபெற, நட்சத்திர வீரர் சூர்யவன்ஷி முக்கியமான இன்னிங்ஸ் ஆட வேண்டும்.

2025 யு19 ஆசியக்கோப்பை தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 21ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாடப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான், யுஏஇ, மலேசியா ஆகிய அணிகள் ஏ பிரிவிலும், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, நேபாள் ஆகிய அணிகள் பி பிரிவிலும் இடம்பெற்றன.

இந்தியா யு19 - பாகிஸ்தான் யு19

பரபரப்பாக நடந்த தொடரில் அபாரமாக விளையாடிய இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன. கோப்பைக்கு யாருக்கு என்ற இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது.

சமீபகாலமாக இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் அதிக கவனம் பெற்ற நிலையில், யு19 ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியும் அதிக கவனம்பெற்றது.

இந்தியா யு19 - பாகிஸ்தான் யு19

பரபரப்பாக தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில், தொடக்க வீரராக களமிறங்கிய சமீர் மனாஸ் 113 பந்தில் 17 பவுண்டரிகள் 9 சிக்சர்களை பறக்கவிட்டு 172 ரன்கள் குவித்தார். சமீரின் அபாரமான ஆட்டத்தால் 50 ஓவரில் 347 ரன்கள் குவித்துள்ளது.

சமீர் மனாஸ்

யு19 ஆசியக்கோப்பையை வெல்லவேண்டுமானால் இந்தியா 348 ரன்கள் என்ற ரெக்கார்ட் சேஸிங் செய்யவேண்டும். இந்தியாவின் நட்சத்திர வீரராக வளர்ந்துவரும் சூர்யவன்ஷி மிகப்பெரிய இன்னிங்ஸ் விளையாடினால் இந்தியாவிற்கு கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு உள்ளது.