வங்கதேசம் - பாகிஸ்தான் web
கிரிக்கெட்

பாகிஸ்தான் மோசமான ஆட்டம்.. வங்கதேசத்துக்கு 136 ரன்கள் இலக்கு!

வங்கதேசத்துக்கு எதிரான ஆசியக்கோப்பை சூப்பர் 4 போட்டியில் 136 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான் அணி.

Rishan Vengai

2025 ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிப்போட்டியை நோக்கி நகர்ந்துள்ளது. இந்தியா, இலங்கை, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிய நிலையில், இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. அதேபோல 2 போட்டிகளில் தோற்ற இலங்கை தொடரிலிருந்து வெளியேறியது.

ஆசியக் கோப்பை

இந்நிலையில் தலா 1 போட்டியில் வெற்றிபெற்ற வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறுவதற்கான போட்டியில் மோதிவருகின்றன.

135 ரன்கள் மட்டுமே அடித்த பாகிஸ்தான்..

பரபரப்பாக தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, வங்கதேசத்தி அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவரில் 135/8 ரன்கள் மட்டுமே அடித்தது. 49 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை பாகிஸ்தான் இழந்த நிலையில், முகமது ஹாரிஸ் 31 ரன்களும், நவாஸ் 26 ரன்களும் அடித்து 135 ரன்களுக்கு எடுத்துவந்தனர்.

பாகிஸ்தான்

136 ரன்கள் அடித்தால் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறலாம் என்ற இலக்குடன் வங்கதேச அணி விளையாடிவருகிறது.