2025 ஆசியக்கோப்பையின் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட போட்டியான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின.
துபாய் மைதானத்தில் பரபரப்பாக தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தார்.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு முதலிரண்டு ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்திக் பாண்டியா மற்றும் பும்ரா இருவரும் அதிர்ச்சி கொடுத்தனர். அதற்கு பிறகு களமிறங்கிய வீரர்களுக்கு குல்தீப் யாதவ் தன்னுடைய சுழற்பந்துவீச்சில் தண்ணீ காட்டினார்.
ஒருபக்கம் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை கைப்பற்ற, மறுமுனையில் நிலைத்து நின்று 44 பந்தில் 40 ரன்கள் அடித்த ஷாஹிப்சதாவும் அவுட்டாகி வெளியேறினார். 100 ரன்களாவது பாகிஸ்தான் எட்டுமா என்ற நிலை இருந்தபோது கடைசியாக களத்திற்கு வந்த வேகப்பந்துவீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி அதிரடியாக 4 சிக்சர்களை பறக்கவிட்டு அணியின் ஸ்கோரை 127-க்கு எடுத்துச்சென்றார்.
128 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிவரும் 7 ஓவரில் 64/2 ரன்கள் அடித்து விளையாடிவருகிறது.