இமாத் வாசிம், சன்னியா அஷ்பக் insta
கிரிக்கெட்

”எங்களின் விவாகரத்துக்கு இதுதான் காரணம்” - பாகிஸ்தான் வீரரின் Ex மனைவி பதிவு!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இமாத் வாசிமின் முன்னாள் மனைவி சன்னியா அஷ்பக், தனது விவாகரத்து குறித்த காரணத்தைத் தற்போது தெரிவித்துள்ளார்.

Prakash J

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இமாத் வாசிமின் முன்னாள் மனைவி சன்னியா அஷ்பக், தனது விவாகரத்து குறித்த காரணத்தைத் தற்போது தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இமாத் வாசிம். இவரது முன்னாள் மனைவி சன்னியா அஷ்பக். இவர், தற்போது தனது விவாகரத்து குறித்த காரணத்தைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவில், “நான், இதை ஆழ்ந்த வேதனையுடன் எழுதுகிறேன். என் வீடு உடைந்துவிட்டது. என் குழந்தைகள் தந்தை இல்லாமல் தவிக்கிறார்கள். நான் மூன்று குழந்தைகளின் தாய், அதில் ஐந்து மாதக் குழந்தையும் அடங்கும். அக்குழந்தை, இன்னும் தந்தையால் அரவணைக்கப்படவில்லை. இது நான் பகிர்ந்துகொள்ள விரும்பிய கதை அல்ல.

ஆனால் மௌனத்தை ஒருபோதும் பலவீனமாக தவறாகக் கருதக்கூடாது. எல்லாத் திருமணங்களைப்போலவே, எங்கள் திருமணத்திலும் பிரச்னைகள் இருந்தன. நான் ஒரு மனைவியாகவும் தாயாகவும் உறுதியுடன் இருந்தேன். எங்கள் குடும்பத்தைப் பாதுகாக்க உண்மையான முயற்சிகளை மேற்கொண்டேன். இறுதியில் எங்கள் திருமணத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது, என் கணவரை திருமணம் செய்துகொள்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு மூன்றாம் தரப்பினரின் ஈடுபாடே ஆகும்” எனப் பதிவிட்டுள்ளார்.

இமாத் வாசிம் - சன்னியா அஷ்பக் ஜோடி, ஆகஸ்ட் 26, 2019 அன்று திருமணம் செய்துகொண்டது. அவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இருவருக்குமிடையே தொடர்ந்து கருத்து மோதல்கள் எழுந்த நிலையில், இமாத் வாசிம் சன்னியாவை விவாகரத்து செய்வதாக சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்தார். அதைத் தொடர்ந்து சன்னியாவும் விவாகரத்து செய்வதாக அறிவித்தார்.

இமாத் வாசிம், சன்னியா அஷ்பக்

விவாகரத்து தொடர்பாகப் பதிவிட்ட இமாத் வாசிம், “கடந்த சில வருடங்களாக தீர்க்க முடியாத தொடர்ச்சியான மோதல்கள் காரணமாக, நான் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளேன். குழந்தைகளைப் பொறுத்தவரை, நான் அவர்களின் தந்தையாகவே இருக்கிறேன், அவர்களை முழுமையாகவும் பொறுப்புடனும் தொடர்ந்து பராமரிப்பேன். உங்கள் புரிதலுக்கும் மரியாதைக்கும் நன்றி. தவறான கதைகளில் ஈடுபடவோ அல்லது நம்பவோ வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்" என்று இமாத் தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.