ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியை வெல்வோம் என பாகிஸ்தான் கேப்டன் பேச்சு web
கிரிக்கெட்

IND vs PAK Final| ”இறுதிப்போட்டிக்காக சிறந்ததை சேமித்து வைத்துள்ளோம்..” - பாகிஸ்தான் கேப்டன்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

Rishan Vengai

ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியை வெல்வோம் என பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா பேச்சு..

2025 ஆசியக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன.

இரண்டு நாட்டிற்கும் இடையேயான அரசியல் பதற்றம் காரணமாக, இரண்டு அணி வீரர்களுக்கு இடையேயும் சர்ச்சையான விசயங்கள் நடந்துவருகின்றன.

ind vs pak

இந்தசூழலில் இன்று நடைபெறும் பாகிஸ்தான் - இந்தியா இறுதிப்போட்டியானது அதிகப்படியான எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் கேப்டன் சொன்ன விசயம்..

இன்று நடைபெறும் இறுதிப்போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா, “பாகிஸ்தானும்-இந்தியாவும் விளையாடும்போது எப்போதும் அதிக அழுத்தம் இருக்கும், எந்த அழுத்தமும் இல்லை என்று நாம் சொன்னால் அது தவறு. இரு அணிகளும் ஒரே அளவிலான அழுத்தத்தைக் கொண்டிருக்கும்.

நாங்கள் அவர்களை விட அதிக தவறுகளைச் செய்துள்ளோம், அதனால்தான் முந்தைய போட்டிகளில் வெற்றி பெறவில்லை. அவர்களை விட குறைவான தவறுகளைச் செய்தால், நாங்கள் வெற்றி பெறுவோம். எந்த அணி குறைவான தவறுகளைச் செய்கிறதோ அதுவே வெற்றி பெறும், மேலும் நாங்கள் குறைவான தவறுகளைச் செய்ய முயற்சிப்போம்.

நாளை நாங்கள் வெற்றி பெறுவதை நீங்கள் காண்பீர்கள். எங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடுவதே எங்கள் முயற்சி. இந்தியாவை தோற்கடித்து வெற்றிபெறுவோம்” என்று பேசியுள்ளார்.