Babar Azam pt desk
கிரிக்கெட்

”டிவில ஏன் சொல்றீங்க; நேரடியாகவே மெசேஜ் அனுப்பலாமே” : முன்னாள் வீரர்களுக்கு பாக். கேப்டன் பதிலடி!

உலகக் கோப்பை தோல்விகளை அடுத்து தன்னை விமர்சித்து வரும் முன்னாள் வீரர்களுக்கு பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசம் பதிலடி கொடுத்துள்ளார்.

webteam

உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி ஏறக்குறைய அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டது. இதனால் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசம் மீது வாசிம் அக்ரம், சோயிப் மாலிக், மொயின் கான் போன்ற முன்னாள் வீரர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

Inzamam

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பாபர் ஆசம், ”டிவி விவாத நிகழ்ச்சிகளில் விமர்சனங்களை முன்வைப்பது எளிதான ஒன்று” என தெரிவித்தார். எப்படி விளையாட வேண்டும் என முன்னாள் வீரர்கள் தனது செல்போன் எண்ணுக்கு அழைத்து ஆலோசனை வழங்கலாம் என்றும் தனது எண் அவர்கள் அனைவருக்கும் தெரியும் என்றும் பாபர் ஆசம் கூறினார்.

கேப்டன் பதவி தனது பேட்டிங் திறனை பாதிக்கவில்லை என்றும் அவர் விளக்கினார்.

தோல்விகளுக்கு என்ன காரணம் என பாகிஸ்தானுக்கு சென்றபின் ஆய்வு செய்வோம் என்றும் தற்போது அடுத்த போட்டியில் வெல்வதே இலக்கு என்றும் பாபர் ஆசம் கூறினார்.

பாகிஸ்தான் கேப்டன் பதவியில் இருந்து விலகுவது குறித்தெல்லாம் சிந்திக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். பாகிஸ்தான் அணி தனது கடைசி லீக் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக மிகமிக பெரிய வெற்றியை ஈட்டினால் மட்டுமே அரையிறுதிக்கு தகுதிபெறும் நிலையில் உள்ளது.