லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள 3வது ஒருநாள் போட்டி தொடரை தீர்மானிக்கிறது. ரோகித் சர்மாவின் ஓய்வு பற்றிய வதந்திகளை பிசிசிஐ செயலாளர் தெளிவுபடுத்தி, அவர் அணியில் தொடர்வார் என அறிவித்தார். மேம்படுத்தப்பட்ட அணியில் சுப்மன் கில் கேப்டனாக, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் உள்ளிட்டோர் உள்ளனர். காயம் காரணமாக வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட்டார்.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடிவருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடரில் ஒரு போட்டியில் கூட வெல்லாத இந்திய அணி 0-4 என படுதோல்வியை சந்தித்தது,
இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடந்துவரும் நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி தலா 1 போட்டியில் வெற்றிபெற்றுள்ளன.
1-1 என தொடர் சமநிலையில் இருக்கும் சூழலில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கவிருக்கிறது.
இந்தப்போட்டிக்கு முன்னதாக ரோகித் சர்மாவிற்கு இதுதான் கடைசி போட்டி என்றும், அவர் இந்த போட்டிக்கு பிறகு ஓய்வுபெறுவார் என்றும் செய்திகள் பரவின. ஆனால் அதையெல்லாம் மறுத்த பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா ரோகித் லார்ட்ஸ் போட்டிக்கு பிறகும் இந்திய அணியில் தொடர்வார் என முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்தசூழலில் தான் தற்போது அப்டேட் செய்யப்பட்ட இந்திய அணியில் ரோகித் சர்மாவின் பெயர் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்தப்போட்டியில் காயம் காரணமாக வாஷிங்டன் சுந்தர் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக ஹர்ஷ் துபே சேர்க்கப்பட்டுள்ளார்.
மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான மேம்படுத்தப்பட்ட இந்திய அணி: சுப்மன் கில் (கேப்டன்), ரோகித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), கேஎல் ராகுல் (WK), இஷான் கிஷன் (WK), அக்சர் படேல், சிவம் துபே, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், குர்னூர் ப்ரார், பிரின்ஸ் யாதவ், ஹர்ஷ் துபே