Raechelle Chase
Raechelle Chase Raechelle Chase insta
கிரிக்கெட்

உடற்பயிற்சி வீடியோக்களால் பிரபலமான நியூசி. பெண் பாடி பில்டர் மர்ம மரணம்! சோகத்தில் ஃபாலோவர்ஸ்!

Prakash J

இன்று, ஒவ்வொருவரும் தங்களது உடலைப் பேணிக் காப்பதில் தீவிர கவனம் செலுத்திவருகின்றனர். இதற்காக, சிலர் உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் சென்று பயிற்சி மேற்கொள்கின்றனர். இன்னும் சிலர் திறமையான பயிற்சியாளர்கள் வெளியிடும் ஆலோசனை வீடியோவைக் கேட்டு பயிற்சி மேற்கொள்வோரும் உண்டு. அந்த வகையில், ’உடலைக் கட்டுக்கோப்பாக வைப்பது’ என்பது பற்றி, பல தகவல்களையும், ஆலோசனையும் பயனர்களுக்கு வழங்கியவர் நியூசிலாந்தின் பிரபல பாடி பில்டர் ரேச்சல் சேஸ்.

ரேச்சல் சேஸ்

இவர், உடலுக்கான ஆரோக்கியம் தவிர, குடும்ப நிகழ்வுகள் மற்றும் அதுகுறித்த ஆலோசனைகளியும் வழங்கி வந்தார். இந்த நிலையில், அவர் மரணம் அடைந்திருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை அவருடைய மூத்த மகள் அன்னா சேஸ் உறுதிப்படுத்தியிருக்கிறார். ஆனால் ரேச்சல் மரணத்தின் பின்னணி குறித்த தகவல்களை அவரது மகள் தெரிவிக்கவில்லை. அவரது மரணத்திற்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை. இதுபற்றி நியூசிலாந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க: “நம்பிக்கை இழக்கவில்லை” - இந்தியாவை நியூசிலாந்து வீழ்த்தும் என மீண்டும் பதிவிட்ட பாகிஸ்தான் நடிகை!

இதுகுறித்து அவர், "ரேச்சல் ஆதரவாகவும், அன்பானராகவும் இருந்தார், எப்போதும் எங்களுக்கு சிறந்த ஆலோசனைகளைத் தந்துகொண்டிருந்தார். அவர், உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்களுக்கு ஊக்கமளித்துள்ளார். நான் அவரை இழக்கிறோம். அவர் மீது நாங்கள் வைத்த அன்பு ஒருபோதும் அழியாது’ எனப் பதிவிட்டுள்ளார். அவருடைய மரணம் ரேச்சலின் உறவினர்களை மட்டுமல்ல, பயனர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பலரும் அவர் மரணம் குறித்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

ரேச்சல் சேஸ்

சமூக ஊடகங்களில், ரேச்சலை 14 லட்சம் பேர் பின்தொடருகின்றனர். கிறிஸ் சேஸ் என்பவரை திருமணம் செய்துகொண்ட ரேச்சல், அவருடன் 14 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், ரேச்சல் மற்றும் கிறிஸ் சேஸ் தம்பதி கடந்த 2015ஆம் ஆண்டு பிரிந்தனர். இதன்பின்னர், போதைப் பொருள் கடத்தலுக்காக கிறிஸ் கைது செய்யப்பட்டு, 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். ரேச்சல் தனி ஆளாக தன்னுடைய 5 குழந்தைகளையும் வளர்த்தார். இந்தச் சூழலில்தான் அவர் உடற்பயிற்சி, குடும்ப நலன், குழந்தை வளர்ப்பு தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு பயனர்கள் மத்தியில் இடம்பிடித்தார். குறிப்பாக, 2016இல் அவர் வெளியிட்ட, ’தனியாக குழந்தைகளை வளர்ப்பது எப்படி’ என்பது குறித்த வீடியோ பல பெண்களுக்கும் தன்னம்பிக்கையை வளர்த்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிக்க: திடீர் வைரலில் A2B அடையார் ஆனந்த பவன்: பெரியாரை சுட்டிக்காட்டிய உரிமையாளர்.. கிளம்பிய விவாதம்!