nz vs sl cricinfo
கிரிக்கெட்

3வது ODI போட்டியில் இலங்கை வெற்றி! தொடரை 2-1 என கைப்பற்றியது நியூசிலாந்து!

நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 140 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றிபெற்றது.

Rishan Vengai

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்த இலங்கை அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடியது.

முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என நியூசிலாந்து கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று 2-0 என முன்னிலை பெற்றது நியூசிலாந்து.

nz

இந்நிலையில் 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்ற நிலையில், நியூசிலாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றியை பதிவுசெய்தது இலங்கை அணி.

150 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து..

சாம்பியன்ஸ் டிரோபிக்கு முன்னதாக அனைத்து ஒருநாள் போட்டிகளுக்கும் அணிகள் முக்கியத்துவம் அளித்துவரும் நிலையில், இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு இடையே வலுவான போட்டியாக 3வது ஒருநாள் போட்டி அமைந்தது.

பதும் நிசாங்கா

பரபரப்பாக தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியில், பதும் நிசாங்கா, குசால் மெண்டீஸ், ஜனித் லியாங்கே முதலிய வீரர்கள் அரைசதமடித்து அசத்த 50 ஓவர் முடிவில் 290 ரன்களை சேர்த்தது இலங்கை அணி.

குசால் மெண்டீஸ்

291 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி வீரர்கள் இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டை பறிகொடுத்தனர். க்ளென் பிலிப்ஸ், வில் யங், டாம் லாதம் முதலிய நட்சத்திர வீரர்கள் 0 ரன்னில் வெளியேற, மார்க் சாப்மன் மட்டுமே 81 ரன்கள் அடித்து வெற்றிக்காக போராடினார்.

மார்க் சாப்மன்

ஆனால் 150 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல்அவுட்டான நியூசிலாந்து அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்து தொடரை இழந்த இலங்கை அணி ஆறுதல் வெற்றியை பதிவுசெய்தது.

நியூசிலாந்து

மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர் இரண்டையும் வென்றது.