இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து 7 வெற்றி cricinfo
கிரிக்கெட்

131* ரன்கள் குவித்து டேரில் மிட்செல் அபாரம்.. நியூசிலாந்து அசத்தல் வெற்றி!

இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 131 ரன்கள் குவித்து அசத்தினார் நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல்..

Rishan Vengai

டேரில் மிட்செல் 131 ரன்கள் குவித்து நியூசிலாந்தை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். இந்திய அணியின் பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் குறைபாடுகளை பயன்படுத்தி, நியூசிலாந்து 285 ரன்கள் இலக்கை எளிதில் அடைந்தது. தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இந்திய அணி

இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இறுதிவரை பரபரப்பாக சென்று முடிவை எட்டியது. 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.

இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று தொடங்கி நடைபெற்றது.

நியூசிலாந்து அபார வெற்றி..

பரபரப்பாக தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, கேஎல் ராகுலின் 112 ரன்கள் ஆட்டத்தால் 50 ஓவரில் 284 ரன்கள் குவித்தது.

கேஎல் ராகுல்

285 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய நியூசிலாந்து அணி விரைவாக முதலிரண்டு விக்கெட்டை இழந்தாலும், 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வில் யங் மற்றும் டேரில் மிட்செல் இருவரும் 150 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அசத்தினர். 87 ரன்கள் அடித்திருந்தபோது வில் யங் வெளியேறினாலும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் சிறப்பாக விளையாடிய டேரில் மிட்செல் 131 ரன்கள் குவித்து நியூசிலாந்தை வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.

டேரில் மிட்செல்

டேரில் மிட்செல் கொடுத்த கேட்ச் வாய்ப்பை நழுவவிட்ட இந்திய அணி, பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்திலும் ஒரு அரை நாளை கொண்டிருந்தது. 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமனாகியுள்ள நிலையில், தொடர் யாருக்கு என்ற 3வது போட்டி ஜனவரி 18ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.