கான்வே - லாதம் cricinfo
கிரிக்கெட்

நியூசிலாந்து தொடக்க ஜோடி டாம் லாதம் - டெவான் கான்வே முறியடித்த பிரமாண்ட சாதனை..!

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்தின் தொடக்க வீரர்கள் டாம் லாதம் மற்றும் டெவான் கான்வே இருவரும் சேர்ந்து சாதனை படைத்துள்ளனர்.

Rishan Vengai

நியூசிலாந்து தொடக்க ஜோடி டாம் லாதம் மற்றும் டெவான் கான்வே, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 323 ரன்கள் சேர்த்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் புதிய சாதனை படைத்தனர்.

செய்தியாளர் - சு. மாதவன்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது. அடுத்த போட்டியில் தோல்வியின் விளிம்பில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி போராடி டிரா செய்தது.

டெவான் கான்வே

இந்நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து முன்னிலை பெற்றுள்ள நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி இரண்டு அணிகளுக்கும் இடையே நடந்துவருகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

டாம் லதாம் - டெவான் கான்வே ஜோடி அசத்தல்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங்கை தொடங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 323 ரன்கள் சேர்த்து மிரட்டியது. கேப்டன் லாதம் 137 ரன்கள் குவித்து 15வது டெஸ்ட் சதத்தையும், கான்வே 178* ரன்கள் குவித்து தனது ஆறாவது சதத்தையும் பதிவுசெய்தனர். இதன்மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட தொடக்க ஜோடியாக பிரமாண்ட சாதனை படைத்தனர்.

latham & convey

இதற்கு முன்பு 2019ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தொடக்க ஜோடியாக ரோஹித் சர்மா-மயங்க் அகர்வால் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 317 ரன்கள் அடித்ததிருந்ததே சாதனையாக இருந்தது. இச்சாதனையை நியூசிலாந்து ஜோடி டாம் லதாம் - டெவான் கான்வே முறியடித்துள்ளனர். மேலும் இச்சாதனை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தொடக்க ஜோடியாக அடிக்கப்பட்ட பார்ட்னர்ஷிப்-ல் 12வது இடத்தை பிடித்துள்ளது.

நியூசிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் சாதனைகள்:

அதுமட்டுமில்லாமல் நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தொடக்க ஜோடியாக அதிக ரன்கள் பார்ட்னஷிப்பில் டாம் லதாம் மற்றும் டெவான் கான்வே ஜோடி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இதற்கு முன்னதாக முதலிடத்தில் 1972-ல் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான போட்டியில் நியூசிலாந்தின் தொடக்க வீரர்கள் கிளென் டர்னர் மற்றும் டெர்ரி ஜார்விஸ் இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 387 ரன்கள் சேர்த்தனர். இது முதல் விக்கெட்டுக்கு 300 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் நியூசிலாந்து தொடக்க ஜோடி ஆகும்.

bay ovel ground

மேலும் 300 ரன்கள் தொடக்க ஜோடி பார்ட்னர்ஷிப்பானது நியூசிலாந்து மண்ணில் முதன்முதலாக வந்துள்ளது. இதற்கு முன்பு 1930-ல் இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்தின் டம்ப்ஸ்டர்- மில்ஸ் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 276 ரன்கள் எடுத்து இருந்தது. 95 ஆண்டுகால சாதனை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.