வெல்லிங்டனில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில், இந்தியா அசத்தல் பந்துவீச்சு மூலம் நியூசிலாந்து அணியை 70 ரன்னில் 5 விக்கெட்டுகள் இழக்கச் செய்தது. நிகோலஸ் அரைசதமடித்து க்ளென் பிலிப்ஸுடன் அணியை மீட்க போராடி வருகிறார். இந்தியா இந்த ஜோடியை உடைத்து நியூசிலாந்தை சுருட்ட முயற்சிக்கிறது.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் நியூசிலாந்து அணி 5 டி20 போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது.
டி20 தொடரை 3-2 என வென்ற இந்திய அணி, ஒருநாள் தொடரை 3-1 என வென்று அசத்தியது. இந்தசூழலில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றுவருகிறது.
WTC பட்டியலில் நியூசிலாந்து அணி முதலிடத்திலும், இந்தியா 4வது இடத்திலும் நீடிப்பதால், இத்தொடரில் வென்று இந்தியா முன்னேற தீவிரமாக தயாராகியுள்ளது.
இந்தசூழலில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வெல்லிங்டனில் தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்த நிலையில், நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்து வருகிறது. நீண்ட ஓய்விற்கு பிறகு டெஸ்ட் அணிக்கு திரும்பி வந்திருக்கும் ஜஸ்பிரித் பும்ரா, நியூசிலாந்து கேப்டன் டாம் லாதமை 0 ரன்னுக்கு போல்டாக்கி வெளியேற்றி அதிர்ச்சி கொடுத்தார். மற்றொரு ஓபனர் டெவான் கான்வேவை 4 ரன்னில் அன்ஷூல் கம்போஜ் வெளியேற்ற 12 ரன்னுக்கே 2 விக்கெட்டுகளை இழந்தது நியூசிலாந்து.
தொடர்ந்து விக்கெட் வேட்டை நடத்திய பும்ரா டேரில் மிட்செல், பிளண்டல் இருவரையும் வெளியேற்ற 70 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து விளையாடிவருகிறது. ஒருபக்கம் விக்கெட் சரிந்தாலும் மறுபக்கம் நிதானமாக ஆடிவரும் நிகோலஸ் அரைசதமடித்ததோடு, க்ளென் பிலிப்ஸ் உடன் நல்ல பார்ட்னர்ஷிப்பையும் அமைத்து அணியை மீட்க போராடிவருகிறார். இந்தியா இந்த ஜோடியை உடைத்து நியூசிலாந்தை சுருட்டவேண்டும் என்ற முயற்சியில் பந்துவீசிவருகிறது.