mitchell starc web
கிரிக்கெட்

NO கம்மின்ஸ், NO ஹசல்வுட்.. பிங்க்-பால் டெஸ்ட்டில் அசாதாரண RECORD.. தனியாளாக மிரட்டும் ஸ்டார்க்!

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் தன்னுடைய அபாரமான பந்துவீச்சு மூலம் மிரட்டிவருகிறார் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க்..

Rishan Vengai

பெர்த் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட்டில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய மிட்செல் ஸ்டார்க், இரண்டாவது டெஸ்ட்டிலும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். ஆஸ்திரேலியாவின் பிங்க் பால் டெஸ்ட்டில் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை 6வது முறையாக வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை ஸ்டார்க் தனியாளாக வழிநடத்துகிறார்.

கிரிக்கெட் வரலாற்றில் பாரம்பரியமிக்க டெஸ்ட் தொடரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 144வது சீசன், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஆஸ்திரேலியா மண்ணில் நடந்துவருகிறது..

ஆஸ்திரேலியா சென்றுள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி, 15 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வெல்லும் எண்ணத்தில் களம்கண்டது. ஆஸ்திரேலியா அணியில் பாட் கம்மின்ஸ், ஹசல்வுட் போன்ற மேட்ச் வின்னிங் பவுலர்கள் இல்லை என்பதால் இங்கிலாந்து தொடரை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது..

மிட்செல் ஸ்டார்க்

ஆனால் பெர்த் மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய மிட்செல் ஸ்டார்க் தனியாளாக இங்கிலாந்து அணியை சிதைத்துவிட்டார்..

இந்தசூழலில் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார்..

மிட்செல் ஸ்டார்க்கின் மிரட்டல் பந்துவீச்சு..

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு கம்மின்ஸ் மற்றும் ஹசல்வுட் இருவரும் திரும்பிவிடுவார்கள் என சொல்லப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியிலும் அவர்கள் இல்லாமல் ஸ்டீவ் ஸ்மித்தே அணியை வழிநடத்துகிறார்..

starc

பிங்க் பால் டெஸ்ட் போட்டியாக பிரிஸ்பேனில் நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்துவரும் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் குவித்துள்ளது.. ஆஸ்திரேலியா மண்ணில் முதல் டெஸ்ட் சதத்தை அடித்திருக்கும் ஜோ ரூட், இங்கிலாந்தை பேட்டிங்கில் முன்னின்று வழிநடத்துகிறார்..

joe root

முதல் டெஸ்ட்டில் மிரட்டிய மிட்செல் ஸ்டார்க், இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.. பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டை வீழ்த்திய ஸ்டார்க், இரண்டாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸிலும் 6 விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளார். தனியொரு ஆளாக ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை வழிநடத்தும் ஸ்டார்க் தான் ஏன் சாம்பியன் பந்துவீச்சாளர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்..

பிங்க் பால் டெஸ்ட்டில் அசுரன்..

கப்பா மைதானத்தில் நடைபெற்றுவரும் பிங்க் பால் டெஸ்ட்டில் 5 விக்கெட்டை வீழ்த்திய ஸ்டார்க், 6வது முறையாக இந்த சாதனையை படைத்துள்ளார்.. விளையாடிய 16 பிங்க் பால் டெஸ்ட்டில் இந்த சாதனையை படைத்துள்ளார்.. மற்ற பவுலர்கள் 2 முறை மட்டுமே 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்..