பதிரானா web
கிரிக்கெட்

2026 ஐபிஎல் ஏலம்| கழட்டிவிட்ட சிஎஸ்கே.. 18 கோடிக்கு ஏலம்போன பதிரானா!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டெத் பவுலிங் ஆயுதமாக இருந்த பதிரானாவை 2026 ஐபிஎல்லுக்கு முன்னதாக கழட்டிவிட்டது சிஎஸ்கே.

Rishan Vengai

2026 ஐபிஎல் ஏலத்தில் பதிரானா 18 கோடிக்கு ஏலம்போனார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வெளியிடப்பட்ட அவருக்கு, லக்னோ, டெல்லி, கொல்கத்தா அணிகளுக்கு இடையே போட்டி நிலவியது.

2026 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் அபுதாபியில் தொடங்கியுள்ளது. 77 இடங்களுக்காக 350 வீரர்கள் பட்டியலிப்படுகின்றனர். கேகேஆர் 64.3 கோடி பர்ஸ் தொகையுடனும், சென்னை அணி 43.4 கோடி பர்ஸ் தொகையுடனும் களமிறங்கியதால் எதிர்ப்பார்ப்பு அதிகமாக இருந்துவருகிறது.

2026 ipl auction

பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் கேமரூன் க்ரீனுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையே போட்டி நிலவிய நிலையில், 25 கோடிவரை சென்ற சென்னை அணி பின்வாங்கியது. 25.20 கோடி ரூபாய்க்கு ஏலமெடுத்து கேமரூன் க்ரீனை தக்கவைத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

18 கோடிக்கு ஏலம்போன பதிரானா..

2026 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ரவீந்திர ஜடேஜாவை வெளியிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் 13 கோடிக்கு இருந்து பதிரானாவையும் வெளியிட்டது. இது சென்னை ரசிகர்களுக்கே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் 2026 ஐபிஎல் ஏலத்தில் 18 கோடிக்கு ஏலம் போயுள்ளார் பதிரானா.

2026 ஐபிஎல் ஏலத்தில் 2 கோடி அடிப்படை விலைக்கு வந்த பதிரானாவிற்கு டெல்லி அணியும், லக்னோ அணியும் போட்டியிட்டன. 15.60 கோடிவரை போட்டியிட்ட டெல்லி அணி விலகிய நிலையில், திடீரென ஏலத்திற்குள் புகுந்த கேகேஆர் அணி 18 கோடிக்கு பதிரானாவை தட்டிச்சென்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் அகீல் ஹொசனை 2 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.