Lasith Malinga
Lasith Malinga Twitter
கிரிக்கெட்

மீண்டும் இணையும் மலிங்கா + பொல்லார்டு + ரோகித்! மும்பை இந்தியன்ஸ் பவுலிங் கோச்சாக "Malinga" நியமனம்!

Rishan Vengai

2022 ஐபிஎல் தொடரில் தங்களுடைய வலுவான அணியில் இருந்த ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு, மலிங்கா என பெரிய வீரர்கள் தொடங்கி க்ருணால் பாண்டியா, ராகுல் சாஹர் வரை பழைய அணியை மொத்தமாக கலைத்துவிட்டு இளம் வீரர்கள் கொண்ட புதிய அணியோடு களம் கண்டது மும்பை இந்தியன்ஸ் அணி. இளம் வீரர்கள் கொண்ட அணி என்பதால் தொடர் முழுவதும் மரண அடி வாங்கிய எம்ஐ, 2022 ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியலில் கடைசி இடம்பிடித்து மோசமாக வெளியேறியது.

Mumbai Indians

பின்னர் 2023 ஐபிஎல் தொடரில் தோல்வி, வெற்றி என மாறிமாறி விளையாடிய மும்பை அணியால், குவாலிஃபயருக்கு சென்றும் கூட சிறப்பாக செயல்பட முடியாமல் போனது. எலிமினேட்டர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் உடன் தோல்வியடைந்த அணி புள்ளிப்பட்டியலில் 16 புள்ளிகளுடன் 4வது இடம்பிடித்து வெளியேறியது. இதனால்,

5 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்ற அணியான மும்பை இந்தியன்ஸ், தங்களுடைய பழைய வின்னிங் கூட்டணியை களமிறங்கும் வகையில் முக்கிய அப்டேட்டை அறிவித்துள்ளது.

பவுலிங் கோச்சாக அறிவிக்கப்பட்ட லசித் மலிங்கா!

இதுதொடர்பாக தங்களுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கும் மும்பை இந்தியன்ஸ், அதில் லசித் மலிங்காவை பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருப்பதாக அறிவித்து, “வெல்கம் பேக் லசித்” என பதிவிட்டுள்ளது. மேலும் மார்க் பவுச்சரின் தலைமைக்குழுவில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிரன் பொல்லார்டும் பேட்டிங் கோச்சாக இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது

மலிங்கா, பொல்லார்டு, ரோகித் என பழைய விண்டேஜ் மும்பை இந்தியன்ஸ் அணி ஒன்று சேர்ந்துள்ளது, அந்த அணிக்கு 2024 ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்லும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் லெஜண்ட் பிளேயராக இருந்து வந்த மலிங்கா ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டுவந்தார். தற்போது மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பியுள்ளார். ஏற்கனவே லசித் மலிங்கா தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் அணிக்கும், மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் நியூ யார்க் அணிக்கும் பந்துவீச்சு பயிற்சியாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது.