Laura Cardoso web
கிரிக்கெட்

இதுவரை படைக்காத உலகசாதனை.. T20I-ல் 9 விக்கெட் வீழ்த்தி வரலாறு படைத்த லாரா!

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளார்.

Rishan Vengai

6 நாடுகள் பங்கேற்ற பெண்கள் டி20 தொடரில் பிரேசில்–லெசோதோ போட்டி வரலாற்று முக்கியத்துவம் பெற்றது. மொனிகே 69 ரன்கள் அடித்து பிரேசில் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது. 203 ரன்கள் இலக்கை துரத்திய லெசோதோ அணி, லாரா கார்டோசோவின் அசத்தலான பந்துவீச்சுக்கு முன் சரணடைந்து 13 ரன்னில் ஆல்அவுட் ஆனது. 9 விக்கெட்டுகளை கைப்பற்றிய லாரா வரலாறு படைத்தார்.

6 நாடுகளைச் சேர்ந்த பெண்கள் கிரிக்கெட் அணிகள் மோதும் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் பிரேசில் பெண்கள் மற்றும் லெசோதோ பெண்கள் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பிரேசில் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் மொன்0னிகே 69 ரன்கள் விளாசினார்.

தொடர்ந்து விளையாடிய லெசோதோ அணி 203 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை துரத்தியது. ஆனால் அவ்வணியின் தொடக்க வீரர்களை 1 மற்றும் 3 ரன்னில் லாரா கார்டோசோ வெளியேற்றி அசத்தினார். அடுத்து களமிறங்கிய 7 வீரர்களையும் 0 ரன்னில் வெளியேற்றிய லாரா, அதில் 3 பேரின் ஸ்டம்புகளையும் தகர்த்தெறிந்தார்.

அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்திய லாரா கார்டோசோ 3 ஓவரில் 2 மெய்டன் மற்றும் 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளை கைப்பற்றி வரலாறு படைத்தார்.

சர்வதேச ஆண்கள் அல்லது பெண்கள் டி20 கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற மாபெரும் வரலாறை படைத்த லாரா கார்டோசோ வரலாற்று புத்தகத்தில் தன் பெயரை பதித்தார்.