krunal pandya hong kong sixes / x
கிரிக்கெட்

8 பந்தில் 7 சிக்சர்கள் விட்டுக்கொடுத்த க்ருணால் பாண்டியா! ரசிகர்கள் ஏமாற்றம்!

இந்திய அணியில் க்ருணால் பாண்டியாவை எடுத்துவரவேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்துவரும் நிலையில், அவர் வீசிய 8 பந்தில் 7 சிக்சர்களை விட்டுக்கொடுத்திருப்பது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Rishan Vengai

க்ருணால் பாண்டியா ஹாங்காங் சிக்சஸ் தொடரில் 8 பந்துகளில் 7 சிக்சர்களை விட்டுக்கொடுத்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். பாகிஸ்தான் மற்றும் யுஏஇ அணிகளுக்கு எதிராக மோசமான பந்துவீச்சு காரணமாக இந்தியா 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது.

அடுத்தடுத்த 2 ஐபிஎல் சீசன்களை ஆர்சிபி வென்றதற்கு முக்கிய காரணங்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள் புவனேஷ்வர் குமார் மற்றும் க்ருணால் பாண்டியா. இதனால் அவர்கள் இருவரையும் இந்திய டி20 அணியில் எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை ரசிகர்கள் தொடர்ந்து முன்வைத்துவருகின்றனர்.

புவனேஷ்வர் குமார்

இப்படியான சூழலில் இந்திய டி20 அணியில் இடம்பெற்ற புவனேஷ்வர் குமார், ரசிகர்கள் எதிர்ப்பார்ப்புக்கு மாறாக மோசமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி ஒரு போட்டிக்கு 50 ரன்கள் வீதம் விட்டுக்கொடுத்துள்ளார். அவருடைய ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்துவரும் நிலையில், தற்போது க்ருணால் பாண்டியாவும் மோசமாக விளையாடியிருப்பது ரசிகர்களை ஏமாற்றத்தில் தள்ளியுள்ளது.

ஹாங்காங் சிக்சஸ் தொடரில் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தும் க்ருணால் பாண்டியா, பாகிஸ்தான் மற்றும் யுஏஇ அணிகளுக்கு இடையேயான போட்டியில் வெறும் 8 பந்துகளை வீசி அதில் 7 சிக்சர்களை விட்டுக்கொடுத்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக வீசிய ஒரே ஓவரில் 5 சிக்சர்களை விட்டுக்கொடுத்த அவர் 31 ரன்களை கசியவிட்டார். அதேபோல யுஏஇ-க்கு எதிரான போட்டியில் 2 பந்துகளை வீசி இரண்டையும் சிக்சராக விட்டுக்கொடுத்துள்ளார். அவருடைய தலைமையில் விளையாடிய 2 போட்டியிலும் இந்தியா படுதோல்வியை சந்தித்துள்ளது.