கேஎல் ராகுல் cricinfo
கிரிக்கெட்

IND vs NZ| தனியொருவனாக போராட்டம்.. 8வது ODI சதமடித்தார் கேஎல் ராகுல்.. 284 ரன்கள் அடித்த இந்தியா!

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 8வது ஒருநாள் கிரிக்கெட் சதமடித்து இந்திய வீரர் கேஎல் ராகுல் அசத்தினார்.

Rishan Vengai

ராஜ்கோட் மைதானத்தில் நடந்த போட்டியில், கேஎல் ராகுல் 112 ரன்கள் அடித்து இந்திய அணியை 284 ரன்கள் வரை அழைத்துச்சென்றார்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இந்தியா - நியூசிலாந்து

இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இறுதிவரை பரபரப்பாக சென்று முடிவை எட்டியது. 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.

இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று தொடங்கி நடைபெற்றுவருகிறது.

தனியாளாக போராடி சதமடித்த ராகுல்..

ராஜ்கோட் மைதானத்தில் பரபரப்பாக தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் கில் மற்றும் ரோகித் சர்மா இருவரும் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டாலும் ரோகித் சர்மா 24 ரன்கள், ஸ்ரேயாஸ் 8 ரன்கள், 23 ரன்கள் என அடுத்தடுத்து அவுட்டாக 118 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்திய அணி.

கேஎல் ராகுல்

கேப்டன் கில் அரைசதமடித்து வெளியேற, பொறுப்பை தனதாக்கி கொண்ட கேஎல் ராகுல் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 92 பந்தில் 11 பவுண்டரிகள் 1 சிக்சர் உட்பட 112 ரன்கள் குவித்து மிரட்டினார். தன்னுடைய 8வது ஒருநாள் சதத்தை பதிவுசெய்த கேஎல் ராகுல், இந்திய அணியை 50 ஓவரில் 284 ரன்களுக்கு அழைத்துச்சென்றார்.