2026 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் அபுதாபியில் தொடங்கியுள்ளது. 77 இடங்களுக்காக 350 வீரர்கள் பட்டியலிப்படுகின்றனர். கேகேஆர் 64.3 கோடி பர்ஸ் தொகையுடனும், சென்னை அணி 43.4 கோடி பர்ஸ் தொகையுடனும் களமிறங்கியதால் எதிர்ப்பார்ப்பு அதிகமாக இருந்தது.
2026 ஐபிஎல் ஏலத்தை பொறுத்தவரையில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஆண்ட்ரே ரஸ்ஸல், மேக்ஸ்வெல் போன்ற ஆல்ரவுண்டர்கள் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியதால், அதற்கு அடுத்த இடத்திலிருந்த கேமரூன் க்ரீன் மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் அதிகவிலைக்கு செல்வார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
எதிர்ப்பார்க்கப்பட்டதை போலவே ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டர் கேமரூன் க்ரீனுக்கு சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் போட்டிப்போட்டன. 25 கோடிவரை சென்னை அணி முயற்சி செய்த நிலையில், கடைசிவரை விட்டுக்கொடுக்காத கொல்கத்தா அணி 25.20 கோடி ரூபாய்க்கு தட்டிச்சென்றது.
மற்றொரு எதிர்ப்பார்க்கப்பட்ட வீரரான லிவிங்ஸ்டன் அன்சோல்டாக சென்றார்.
வெறும் 2.75 கோடி கையிருப்புடன் ஏலத்திற்கு வந்த மும்பை இந்தியன்ஸ் அணி, தென்னாப்பிரிக்காவின் ஆல்ரவுண்டர் டிகாக்கை அடிப்படை விலையான 1 கோடிக்கு தட்டிச்சென்றது. மற்ற அணிகள் அவருக்கு எந்த ஆர்வமும் காட்டவில்லை.
மற்றொரு சிறந்த பிட்டாக வெங்கடேஷ் ஐயரை 7 கோடிக்கு தட்டிச்சென்றது ஆர்சிபி அணி. பெங்களூர் அணிக்கு மிடில் ஆர்டர் வீரர் தேவையாக இருக்கும் சூழலில், கொல்கத்தா அணியுடன் போட்டியிட்டு 7 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது ஆர்சிபி. கடந்த மெகா ஏலாத்தில் கூட 23.50 கோடிவரை வெங்கடேஷ் ஐயரை ஏலத்தில் எடுக்க ஆர்சிபி முயன்றது குறிப்பிடத்தக்கது.
1. டேவிட் மில்லர் - 2 கோடி - டெல்லி கேபிடல்ஸ்
2. கேமரூன் க்ரீன் - 25.20 கோடி - கேகேஆர்
3. வனிந்து ஹசரங்கா - 2 கோடி - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
4. வெங்கடேஷ் ஐயர் - 7 கோடி - ஆர்சிபி
5.குயிண்டன் டிகாக் - 1 கோடி - மும்பை இந்தியன்ஸ்
6.பென் டக்கெட் - 2 கோடி - டெல்லி கேபிடல்ஸ்
7. ஃபின் ஆலன் - 2 கோடி - கேகேஆர்
தீபக் ஹூடா, ஜேமி ஸ்மித், ரஹமனுல்லா குர்பாஸ், ஜானி பேர்ஸ்டோ, ஸ்ரீகர் பரத், லியாம் லிவிங்ஸ்டன், சர்பராஸ் கான், ரச்சின் ரவீந்திரா, பிரித் வி ஷா, டெவான் கான்வே, ஜேக் பிரேசர் போன்ற வீரர்களை யாரும் வாங்கவில்லை.