2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரானது அரையிறுதிப்போட்டிகளை எட்டிய நிலையில், இந்தியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்று அசத்தின.
துபாயில் நடைபெற்ற முதல் அரையிறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்நிலையில் இரண்டாவது அரையிறுதிப்போட்டியானது லாகூரில் உள்ள கடாஃபி மைதானத்தில் இன்று தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்துவருகிறது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, ரச்சின் ரவீந்திரா மற்றும் கேன் வில்லியம்சனின் அபாரன சதத்தின் உதவியால் 362 ரன்கள் என்ற சாதனை டோட்டலை பதிவுசெய்து அசத்தியது.
இப்போட்டியில் 102 ரன்கள் குவித்த நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன், சர்வதேச கிரிக்கெட்டில் ODI, டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகள் என மூன்று வடிவத்தையும் சேர்த்து 19,000 சர்வதேச ரன்கள் என்ற மைல்கல் சாதனையை படைத்து அசத்தியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 19,000 ரன்களை எட்டும் முதல் நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் கேன் வில்லியம்சன்.
நியூசிலாந்து அணிக்காக அதிக சர்வதேச ரன்கள்:
*கேன் வில்லியம்சன் – 440 இன்னிங்ஸ்கள் – 19,075 ரன்கள்*
* ராஸ் டெய்லர் – 510 இன்னிங்ஸ்கள் – 18,199 ரன்கள்
*ஸ்டீபன் ஃபிளெமிங் – 462 இன்னிங்ஸ்கள் – 15,289 ரன்கள்
*பிரண்டென் மெக்கல்லம் – 474 இன்னிங்ஸ்கள் – 14,676 ரன்கள்
* மார்டின் கப்டில் – 402 இன்னிங்ஸ்கள் - 13,463 ரன்கள்